வெள்ளி, 30 டிசம்பர், 2011

ஜி.எஸ்.எம் வலையமைப்பின் மூலமான கையடக்கத்தொலைபேசிப் பாவனையாளர்களுக்கு புதிய அச்சுறுத்தல்

உலகில் அதிகமானோர் பாவிக்கும் கையடக்கத்தொலைபேசிகள் ஜி.எஸ்.எம் எனப்படும் (Global System for Mobile Communications) தொழிநுட்பத்தின் மூலமே இயங்குகின்றது.
புள்ளிவிபரங்களின் படி உலகத் தொலைபேசிகளில் 80% இத்தொழில்நுட்பத்தின் மூலமே இயங்குகின்றது.

இந்நிலையில் ஜேர்மனிய நாட்டு ஆராய்ச்சி அமைப்பான Security Research Labs இன் தலைவரான கார்ஸ்டன் நோஹல் ஜி.எஸ்.எம். கையடக்கத்தொலைபேசிகளில் காணப்படும் பாதுகாப்புப் குறைபாடு தொடர்பில் ஆய்வறிக்கையொன்றினை வெளியிட்டுள்ளார்.
அதன் படி ஜி.எஸ்.எம். தொழில்நுட்பத்தில் இயங்கும் அனைத்து கையடக்கத்தொலைபேசிகளிலும் பாதுகாப்புக் குறைபாடு காணப்படுவதாகவும் இதன் மூலம் எமது கையடக்கத்தொலைபேசிகளிலிருந்து நாம் அறியாதவகையில் அழைப்புகளை மேற்கொள்ளமுடிவதுடன்,
குறுந்தகவல்களையும் அனுப்பமுடியுமென நோஹல் எச்சரிகை விடுத்துள்ளார்.
அதாவது நமது கையடக்கத்தொலைபேசிகள் நாம் அறியாத வகையில் ஹெக்கர்களின் கைகளுக்குள் சிக்குவதாகும்
இப்பாதுகாப்புக் றைபாட்டின் மூலம் குறைந்த மணித்தியாலத்தில் அதிக கையடக்கத்தொலைபேசிகளை தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர ஹெக்கர்களால் முடியுமென நோஹல் குறிப்பிட்டுள்ளார்
பொதுவாக சி.டி.எம்.ஏ உட்பட மற்றைய வலையமைப்புகளை விட ஜி.எஸ்.எம் ஆனது பாதுகாப்பாகக் கருதப்படுகின்றது
எனினும் தற்போது வெளியாகியுள்ள செய்தியானது பாவனையாளர்களுக்கும், சேவை வழங்குநர்களுக்கும் சற்று அதிர்ச்சியளிப்பதாகவே உள்ளது.
ஸ்மார்ட் போன்களின் விற்பனையானது தற்காலத்தில் வெகுவாக அதிகரித்துள்ளமையானது ஹெக்கர்களின் கவனத்தினை மொபைல்உலகத்தினை நோக்கித் திருப்பியுள்ளது.

உள்ளமும் உடலும் நலிவுற்றாலும், நித்திரை விழித்து கல்வியில் முத்திரை பதித்துள்ள ஈழத்தமிழினம்

[ வெள்ளிக்கிழமை, 30 டிசெம்பர் 2011 ]
இலங்கை அரசின் அடக்குமுறைக்குட்பட்ட வாழ்வின் மத்தியிலும் இராணுவ நடமாட்டத்தின் நெருக்கடியின் மத்தியிலும் நமது ஈழத்தமிழ் உறவுகளின் வாழ்வியல் அங்கே நகர்ந்து கொண்டிருக்கின்றது.
அந்த அரசியல் உயர் பீடத்தில் அமர்ந்து கொண்டு இந்த மாங்கனித் தீவில் நமது தமிழ் மக்களையும் அவர்தம் வாரிசுகளான இளைய தலைமுறையினர், மாணவ மாணவிகள் ஆகியோரை வதைத்தும் உளரீதியாகவும் உடல்ரீதியாகவும் கொடுமைக்குள்ளாக்கும் அரசாங்கங்கள் எத்தனையோ ஆண்டுகளாக நடத்தி வரும் அடக்குமுறை ஆட்சிக்கெதிராக முதலில் சாத்வீகப் போராட்டங்களையும் பின்னர் ஆயுதப் போராட்டத்தையும் நடத்திய நமது இனம் அரசியல் ரீதியிலான போராட்டத்தில் மீண்டும் இலங்கையின் கொடிய அரசினால் அடக்கப்பட்டு தனது சுயத்தை இழந்த ஒரு இனமாக அங்கு வாழ்ந்து கொண்டிருக்கின்றது.
பெயரளவில் அங்கு தமிழ் மொழிக்கு சுதந்திரம் என்று சொன்னாலும் தமிழர் பிரதேசங்களில் தமிழ் மொழியிலேயே அரசின் நிர்வாகம் நடைபெறுகின்றது என்று கூறப்பட்டாலும் வடக்கிலும் கிழக்கிலும் ஆளுநர் மற்றும் இராணுவ உயர் பதவிகளில் எல்லாம் பெரும்பான்மை மொழி பேசும் அதிகாரிகளை நியமித்து அவர்கள் மூலம் சிங்கள பெரும்பான்மையினத்தின் அடக்குமுறை வடிவத்தை மறைமுகமாக அறிமுகம் செய்து வருகின்றது.
வடக்கு கிழக்கு பகுதிகளில் அநேக பெரும்பான்மை மொழி பேசும் ஊழியர்களை சேவைக்கு அமர்த்தி அதன் மூலம் அவர்களின் பிள்ளைகளோ அன்றி உறவினர்களோ கல்வி கற்பதற்கு வசதியாக தமிழர் பிரதேசங்களில் எல்லாம் சிங்கள பாடசாலைகளை நிறுவி வருகின்ற இந்த அரசாங்கத்தின் கபட நோக்கம் எமது மக்களுக்கு புரியாதது அல்ல.
மறுபக்கத்தில் பெரும்பான்மை இன மக்களின் சமய வழிபாட்டுக்காக என்று சொல்லி  பௌத்த விகாரைகளை தமிழர் பிரதேசங்களில் கட்டி எழுப்பி அவற்றுக்கு அருகே அல்லது உள்ளே பெரிய அளவிலான புத்தர் சிலைகளை எழுப்பி…இவ்வாறாக ஏற்கனவெ தமிழின் மணம் கமழ்ந்த இலங்கையின் வடக்கு கிழக்குப் பகுதிகளை சிங்களத்தின் சிதறல் காற்று வீசும்படியான முயற்சிகளை இந்த அரசு தொடர்ச்சியாக எடுத்து வருகின்றது..
இவ்வாறு மிகவும் மோசமான அடக்கு முறை மற்றும் தமிழ் மாணவர்கள் மீதான கொடிய இராணுவ இம்சைகள், பொருளாதாரத் தடைகள் ஆகியன விடுக்கப்படுதல், ஆயுதங்களைக் கொண்டு மேற்கொள்ளப்படும் அச்சுறுத்தல்கள் ஆகியவற்றின் மத்தியில் நமது மாணவ மணிகள் அங்கு நித்திரை விழித்து தங்கள் பாடங்களைக் கற்று பொதுப் பரீட்சைகளில் முத்திரை பதித்துள்ளார்கள்.
ஆமாம் நமது மாணவச் செல்வங்கள் பலர் கடந்த வாரம் வெளிவந்த இலங்கை முழுவதற்குமான உயர்தர பரீட்சையில் வெற்றிபெற்றுள்ளனர். அந்த மாணவச் செல்வங்களில் இருவர்
அண்மையில் வெளிவந்த க.பொ.த (உயர் தர) பரீட்சையில் சாதனை படைத்துள்ளனர்.
உடுப்பிட்டி அமெரிக்க மிஷன் கல்லூரி மாணவன் செல்வன் கமலவண்ணன் கமலவாசன் அகில இலங்கையிலும் கணிதப் பிரிவில் முதலிடத்தையும் யாழ்ப்பாணம் சென். ஜோன்ஸ் கல்லூரி மாணவன் சஞ்சயன் ஆனந்தராஜா விஞ்ஞானப் பிரிவில் இரண்டாவது இடத்தையும் பெற்று ஈழத்தமிழ் மக்களுக்கு புகழையும் அவர்களது பெற்றோர்களுக்கு பெருமையையும் தேடித் தந்துள்ளார்கள்.
இந்த மாணவச் செல்வங்கள் நமது தமிழ் மாணவர்களோடு மட்டும் கல்விப் போட்டிகளில் மோதவில்லை. முழு இலங்கைக்கும் பொதுப் பரீட்சையாக நடத்தப்படும் இதில் கல்வித்துறை சார்ந்த பெரும் வசதிகளைக் கொண்ட நகர்ப்புறத்து சிங்களப் பாடசாலைகளில் கல்வி பயிலும் சிங்கள மாணவர்களோடு “கல்விப் போட்டிகளில்” மோதியே வெற்றிகளை அடைந்துள்ளார்கள்.
தமிழ் மாணவர்கள் அடைந்த வெற்றி சிங்கள பெற்றோருக்கு மாத்திரமன்றி பெரும்பான்மை சிங்கள அரசியல்வாதிகளுக்கும் பெரிய அதிர்ச்சியை கொடுத்துள்ளதாக கொழும்பிலிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.
இதேவேளை யாழ்;ப்பாண பல்கலைக்கழகத்தின் கல்வியியல்துறையின் பேராசிரியரும் தற்போது கனடாவின் ரொறன்ரோ பல்கலைக்கழகத்தில் குறுகிய கால பணிக்காக அழைக்கப்பட்டவருமான பேராசிரியர் மா. சின்னத்தம்பி கனடா உதயன் பத்திரிகையில் தொடர்ச்சியாக எழுதி வந்த யாழ்ப்பாணத்தில் கல்வி என்னும் பெயரிலான கட்டுரைகளின் தொகுதி நூலாக வெளிவந்துள்ளது.
இதன் வெளியீட்டு விழா கனடாவில் நடைபெற்றபோது பல கனடிய அன்பர்கள் கலந்துகொண்டு மேற்படி நூலின் பிரதிகளை பெற்றுக்கொண்டு நமது தாயகத்தில் வறுமையினால் வாடும் சில மாணவர்களின் கல்விப் பசியை போக்கும் கைங்கரியத்திற்கு உதவிகளை வழங்கிச் சென்றார்கள்.
இதேவேளை கனடாவில் இரண்டு தமிழ் மாணவர்கள் வேற்றின மாணவர்களோடு போட்டியிட்டு கொம்பியூட்டர் விஞ்ஞானத் துறையில் வெற்றிகளை ஈட்டியுள்ளார்கள். கனடாவில் புகழ்பெற்ற ஐபிஎம் நிறுவனம் கனடாவின் பாடசாலைகளுக்கிடையே நடத்திய High School Computer Programming  போட்டியில் ஈழத்தமிழ் மகன் கஜன் இலங்கேஸ்வரன் தலைமையிலான Bramton Fletcher’s Medow உயர் கல்லூரி மாணவர்கள் குழு வெற்றி பெற்றுள்ளது.
கனடாவின் ரொறன்ரோ பெரும்பாகத்தில் உள்ள சுமார் 40 பாடசாலைகள் பங்குபற்றிய மேற்படி போட்டியில் கஜன் இலங்கேஸ்வரன் மற்றும் ஹர்சன் நித்தியானந்தன் ஆகியோர் அடங்கிய குழு வெற்றி பெற்றுள்ளது.
இவ்வாறாக நவீன கற்றல் வசதிகளைக் கொண்ட மேற்குலக நாடுகளிலும், மறுபக்கத்தில் மிகக்குறைந்த கற்றல் வசதிகளைக் கொண்ட நமது தாயக மண்ணிலும் நமது மாணவச் செல்வங்கள் அடையும் கல்வியியல் வெற்றிகள், நமது எதிர்கால சமூக, கலாச்சார மற்றும் அரசியல் பலத்தையும் ஈட்டித்தரும் என்ற நம்பிக்கையோடு காத்திருப்போமாக
கனடா உதயன் கதிரோட்டம்

புதன், 28 டிசம்பர், 2011

தமிழில் பிறமொழி கலவாது உரையடவேண்டியது ஏன்!!

இதோ விஜய் தொலைக்கட்சியில் "தமிழ்பேச்சு" நிகழ்ச்சியில் ஒரு சிறுவன் தமிழில் பிற மொழி கலவாமல் பேசுவதின் அவசியத்தைக் குறித்து ஆற்றிய உரை.

புலிகள் தலைவர் பிரபாகரனின் முகத்துடன் முத்திரை வெளியிட்ட பிரான்ஸ் அரசு!

பிரான்ஸில் தமிழீழத்தின் தேசியச் சின்னங்களைக் கொண்ட தபால் முத்திரைகள், பிரான்சு தபால் அமைச்சின் அங்கீகாரத்துடன் வெளிவந்துள்ளன.
இவற்றுள் தமிழீழத் தேசியக்கொடி, தேசியப்பூ, தேசிய மிருகம், தேசியப் பறவை, தேசிய மரம் ஆகிய சின்னங்களைக் கொண்ட முத்திரைகளும் அடங்குகின்றன.
எம்மவர்கள் கடிதங்களையும் பொதிகளையும் அனுப்புவதற்கு இந்த முத்திரைகளைப் பயன்படுத்தலாம்.
இந்த முத்திரைகளைப் பயன்படுத்துவதன் மூலம் எமது சின்னங்களை உலகம் முழுவதும் சென்றடையவைத்து, தமிழினத்தின் பெருமையையும் வரலாற்றுச் சிறப்பையும் அழியாது காப்பது ஒவ்வொரு தமிழர்களினதும் வரலாற்றுக் கடமையாகும்.
.
.
.

திங்கள், 26 டிசம்பர், 2011

இந்தப் படத்தில் இருக்கும் தம்பியை தேடித் தருவீர்களா ?

 இந்த படத்தில் இருக்கும் தம்பியை தேடித் தருவீர்களா ? அந்த வயலின் அவனிடம் இருக்கின்ற​தா ? இசையில்லாம​ல் அவன் வாழமாட்டான்.
உங்களுக்கு தெரிந்த எல்லோருக்கு​ம் ,இந்த செய்தியை அனுப்புவீர்​களா ? ஏசுநாதர் பிறந்த நாளில் இந்த தர்மத்தை செய்யுங்கள் !
 இது நாம் விடுக்கும் வேண்டுகோள் அல்ல ! BBC அறிவிப்பாளர்களால் உலக மக்களுக்கு விடுக்கப்படும் வேண்டுகோள் !
இராணுவத்திடம் சரண்டையச் சென்ற மக்கள் தம்மிடம் உள்ள பணத்தை நகைகளை மெற்றும் பெறுமதியான பொருட்களை மட்டும் எடுத்துச் சென்றனர் !
 ஆனால் இச் சிறுவனைப் பாருங்கள் அவன் கைகளில் விளையாட்டுப் பொருட்கள் கூட இல்லை ! ஆனால் அவன் கைகளில் இருப்பது ஒரு வயலின் ! இசை இல்லாமல் இவன் இருக்கமாட்டான் போலும் !
இவன் தற்போது எங்கே ? இருக்கிறானா இல்லை இறந்துவிட்டானா ? இராணுவத்தின் பாலியல் கொடுமைக்கு ஆளாகியிருப்பானா ? இல்லை இவனை சிலர் பிடித்து வெளிநாட்டில் வேலை பார்க்க ஒரு வேலைக்காரனாக அனுப்பிவிட்டார்களா ?
 என்னவென்று நினைப்பது ? இதோ இவனைத் தேடி BBC நிருபர் ஒரு யாழ்ப்பாணம் வரை சென்றுள்ளார். அதன் காணொளியை நாம் இணைத்துள்ளோம். இச் சிறுவனுக்காக வேற்றின மக்கள் காட்டும் அக்கறையை எமது சொந்த மக்கள் ஏன் காட்டவில்லை ?
இவவைத் தேடும் பயணத்தை BBC ஆரம்பித்துள்ளது. ஆனால் எமது உலகத் தமிழ் உறவுகளே இவனை நீங்கள் இன்னும் எளிதாகக் கண்டுபிடிப்பீர்கள் என நாம் எண்ணுகிறோம். இவனை உங்களுக்கு அடையாளம் தெரிந்தால் BBC இணையத்தோடு தொடர்புகளை மேற்கொள்ளுங்கள் !

சாதனை மனிதர்களின் தொகுப்பு

உலகில் வியக்கக்கூடிய வகையில் சாதனைகள் நிகழ்த்தும் அதிசய மனிதர்கள் காலத்திற்கு காலம் உருவாகிக் கொண்டு தான் இருக்கிறார்கள்.
இத்தகைய திறமையான மனிதர்களை பார்க்கும் பொழுது தங்களை வளர்த்துக் கொள்ள எத்துணை துன்பங்களையும், தியாகங்களையும் செய்திருப்பார்கள் என்று தான் நினைக்கத் தோன்றுகிறது.

திங்கள், 19 டிசம்பர், 2011

மனித மிருகங்களை பார்த்ததுண்டா வீடியோ இணைப்பு

மனித மிருகங்களை பார்த்ததுண்டா வீடியோ இணைப்பு
இளகிய மனம் படைத்தவர்கள் இந்த வீடியோவை பார்க்க வேண்டாம்

இலங்கை ல் 2009 எகிப்தில் ல் 2011…

சனி, 17 டிசம்பர், 2011

புதிதாக ஒரு மொழியை இலகுவாகக் கற்றுக்கொள்வதற்கு..


புதிதாக ஒரு மொழி கற்க வேண்டும் என்றால் அந்த மொழியை தாய்மொழியாக கொண்டவரிடம் நாம் நேரிடையாக பேசினால் போதும் வெகு சீக்கிரத்தில் அந்த மொழியை கற்றுவிடலாம். ஓன்லைன் மூலம் எந்த மொழியையும் நேரடியாக எளிதாக கற்கலாம், நமக்கு உதவுவதற்காக ஒரு தளம் உள்ளது. புதிய மொழி கற்க வேண்டும் என்றால் அதற்காக பணம் செலவு செய்து அந்த மொழி பயிற்சி அளிப்பவரிடம் சென்று தான் கற்றுக்கொள்வது வழக்கம்.
ஆனால் ஓன்லைன் மூலம் எந்த மொழியையும் இலவசமாக நேரடியாக கற்கலாம் நமக்கு உதவ ஒரு தளம் உள்ளது. இத்தளத்திற்கு சென்று நம் தாய்மொழி என்ன என்பதையும், நாம் என்ன மொழி கற்றுக் கொள்ளப் போகிறோம் என்பதையும் கொடுத்து புதிதாக ஒரு இலவச பயனாளர் கணக்கு உருவாக்கி கொண்டு உள்நுழையவும், நம் கற்றுக்கொள்ள விரும்பும் மொழி பேசுபவர்கள் பல பேர் நேரடியாக ஓன்லைனில் இருப்பார்கள்.
இதில் நாம் விரும்பியவருடன் நேரடியாக வீடியோ சாட்டில் பேசலாம். நம் தாய்மொழியை மற்றவருக்கு கற்றும் கொடுக்கலாம். முதலில் தத்தி தத்தி பேச ஆரம்பிக்கும் நாம் சில நாட்களில் அந்த மொழியில் வல்லவர்களாகி விடலாம், கூடவே நமக்கு நல்ல நண்பர்களும் கிடைக்க வாய்ப்பு உண்டு.
இதற்கென்று இத்தளம் கட்டணம் ஏதுவும் வசூலிக்கவில்லை, இலவசமாகவே இந்த சேவை அளித்து வருகிறது.
இணையதள முகவரி 
 http://verbling.com/

இலகுவாக ஆங்கிலம் கற்கவேண்டுமா? அதுவும் வீட்டில் இருந்தவாறே!


ஆங்கிலம் கற்க கைகொடுக்கும் தளங்களில் கிளாஸ்பைட்ஸ் தளத்தை விஷேடமானது என சொல்லலாம். காரணம் மிகவும் எளிமையான அதே நேரத்தில் சுவாரஸ்யமான முறையில் பாடங்களை கற்று கொள்ள கிளாஸ்பைட்ஸ் வழி செய்வது தான். என்ன தான் ஆங்கிலம் கற்க வேண்டும், ஆங்கிலத்தில் சரளமாக பேச வேண்டும், ஆங்கிலத்தில் படிக்க வேண்டும் என்ற ஆசை இருந்தாலும் மணிக்கணக்கில் பாடங்களை கேட்கவே, இலக்கணத்தை அறிந்து கொள்ளவோ பலருக்கும் பொறுமை இருக்காது.
முதல் பாடத்தை புரிந்து கொண்டு மனதில் பதிய வைப்பதற்குள் அடுத்த பாடம் ஆரம்பமாகிவிட்டால் மிரண்டு போய் விடுவார்கள். ஆசிரியர் எளிதாக சொல்லி கொடுத்தாலும் கூட கவனிப்பதில் சிக்கல் ஏற்படலாம்.
ஆர்வம் இருந்தும் கூட பலர் இந்த தடைகளை தாண்டி ஆங்கில மொழியை கற்பதற்கு தேவையான உத்வேகத்தை பெற முடியாமல் போய்விடுகிறது. இந்த பிரச்சனைக்கு தான் கிளாஸ்பைட்ஸ் குறும்பாடங்கள் மூலம் அழகாக தீர்வு காண்கிறது.
வீடியோ வடிவிலான குறும்பாடங்கள், கல்வி உலகில் இப்போது குறும்பாடங்களை தான் நிபுணர்கள் கற்பதற்கான எளிய வழியாக முன்வைக்கின்றனர்.
குறும்பாடங்கள் என்றால் பாடங்களை சின்ன சின்னதாக பிரித்து ஒரே நேரத்தில் ஒரு அம்சத்தை மட்டும் கற்றுத்தருதல் என புரிந்து கொள்ளலாம். அதிக நேரம் தேவைப்படாமல் குறுகிய கால அளவில் பயிற்றுவிப்பதை இந்த பாடங்கள் முக்கிய நோக்கமாக கொண்டுள்ளன.
குறுங்கல்வி(மைக்ரோ லேர்னிங்) என்று சொல்லப்படும் இந்த வகை பயிற்றுவிக்கும் முறை இணையம் வழி கல்வி கற்பிப்பதிலேயே அதிகம் பயன்படுத்தப்படுகிறது.
கிளாஸ்பைட்ஸ் தளத்தில் காணகூடிய குறும்பாட வீடியோக்கள்ள எல்லாமே 2 நிமிடம் முதல் அதிக பட்சமாக 10 நிமிடம் வரை மட்டுமே ஓட்டக்கூடியவை. சராசரியாக பார்த்தால் 5 நிமிடங்கள் ஒடக்கூடியவை.
எதையுமே வீடியோ கிளிப்பாக சிக நிமிடங்கள் பார்த்து ரசித்து பகிர்ந்து கொள்ளும் யூடியூப் தலைமுறைக்கு இந்த குறும் வீடியோக்கள் ஏற்றவை தான் இல்லையா?
மாணவர்கள் யூடியூப் வீடியாவை பார்த்து ரசிக்கும் உணர்விலேயே இந்த பாடங்களையும் பார்த்து மனதில் நிறுத்தி கொள்ளலாம். ஒவ்வொரு பாடத்திலும் ஏதாவது ஒரு அம்சத்தில் மட்டுமே கவனம் செலுத்தப்பட்டிருக்கும்.
வார்த்தை உச்சரிப்பு, இலக்கண பயன்பாடு, கேள்வி கேட்கும் போது பயன்படுத்த வேண்டிய சொற்கள் என ஏதாவது ஒரு அம்சம் மட்டுமே ரத்தின சுருக்கமாக கற்றுத்தரப்படும்.
மாணவர்களுக்கு நிச்சயம் இந்த கிளிப்கள் சுமையாக இருக்காது. ஆனால் சுவையாக இருக்கும். அத்துடன் குறிப்பிட்ட நேரத்தில் தான் பாடம் படிக்க வேண்டும் என்ற கட்டாயம் இல்லை.
எப்போது விருப்பமோ அப்போது படித்து கொள்ளலாம், எத்தனை முறை வேண்டுமானாலும் பார்த்து கொள்ளலாம். ஒரு பாடம் முடிந்த பின் அடுத்த குறும்பாடத்துக்கு போகலாம்.
உறுப்பினராக சேரும் போதே மாணவர்கள் ஆங்கிலத்தில் சின்னதாக ஒரு தேர்வில் பங்கேற்க வேண்டும். இது கூட மாணவர்களுக்கு எந்த நிலையிலான பாடங்கள் தேவை என்று பரிந்துறைப்பதற்காக தான்.
அதன் பிறகு மாணவர்கள எந்த நிபந்தனையும் இல்லாமல் இஷ்டம் போல கற்கலாம். கிளாஸ்பைட்சின் சிறப்பு இத்தோடு முடிந்துவிடவில்லை.ஒரு விதத்தில் இது இணைய வகுப்பறை போல தான்.அதாவது இங்கு மாணவர்கள் நண்பர்களை தேடி கொள்ளலாம்.அவர்களோடு தொடர்பு கொண்டு பாடம் தொடர்பான குறிப்பு மற்றும் அனுபவங்களை பகிர்ந்து கொள்ளலாம்.
அந்த வகையில் இதனை கற்பதற்கான பேஸ்புக் என்றும் சொல்லலாம். உறுப்பினராக சேரும் போதே மாணவர்கள் தங்களை பற்றிய விவரங்களை சமர்பித்து தங்களுக்கான பக்கத்தை உருவாக்கி கொள்ளலாம்.
பேஸ்புக்கில் உள்ளது போலவே இந்த பக்கத்திலும் சுவர் உண்டு. இதில் மாணவர்கள் தங்கள் மனதில் உள்ளவரை பகிர்ந்து கொள்ளலாம். இதை பார்த்து சக மாணவர்கள் கருத்து தெரிவிக்கலாம். இவர்களும் மற்ற மாணவர்களின் சுவரில் உள்ளவரை படித்து உறையாடலாம்.
பாடங்கள் தொடர்பான கருத்து பரிமாற்றம் என்பதால் படிப்பதிலும் ஒரு ஈடுபாடு ஏற்படும். சந்தேகங்களையும் நிவர்த்தி செய்து கொள்ளலாம். கொஞ்சம் சோர்ந்து போனால் கூட மற்றவர்கள் ஊக்கபடுத்தலாம்.
புதிய பாடங்களை சுட்டிக்காட்டலாம். பாடம் படிக்கும் உணர்வே இல்லாமல் ஏதோ இணைய நண்பர்களோடு உறையாடும் மகிழ்ச்சியான சூழலில் ஆங்கில அறிவை வளர்த்து கொள்ளலாம்.
கூரும் பாடங்களை படிக்க துவங்கிய பின் மானவர்கள் தங்கள் முன்னேற்றத்தை தெரிந்து கொள்ளவும் சுவையான வழிகள் இருக்கின்றன. உதாரணத்திற்கு ஆங்கிலத்தில் பேசி வீடியோவில் பதிவு செய்து அதனை இங்கு சமர்பித்தால் ஆசிரியர்களும் மாணவர்களும் அதை பார்த்து திருத்தங்களை சொல்வார்கள்.
இலக்கண பிழை உச்சரிப்பு போன்றவற்றை இப்படி பட்டை தீட்டி கொள்ளலாம். வாசிப்பு திறனை வளர்த்து கொள்ள வலைப்பதிவு பக்கங்களை படித்து கருத்து பரிமாற்றம் செய்து கொள்ளலாம். வலைப்பதிவு எழுதியும் சமர்பிக்கலாம். தேர்வு எழுதியும் சோதித்து பார்க்கலாம்.
இணையதள முகவரி 
http://classbites.com/ 

வெள்ளி, 9 டிசம்பர், 2011

பூமியைப் போன்றே புதிய கிரகம் கண்டுபிடிப்பு

சுமார் 600 லட்சம் கோடி கி.மீ. தூரத்தில் பூமி போலவே ஒரு கிரகம் இருப்பதை நாசாவின் கெப்ளர் விண்கலம் கண்டுபிடித்துள்ளது.
அண்டவெளியில் உயிரினங்கள் வாழ்வதற்கு ஏற்ற வகையில் வேறு ஏதும் கிரகங்கள் இருக்கிறதா என்று அமெரிக்க விண்வெளி ஆய்வு மையத்தின்(நாசா) கெப்ளர் விண்கலம் ஆராய்ச்சி செய்து வருகிறது.
வெகு தொலைவில் ஒரு நட்சத்திரத்தை சுற்றும் கிரகம் ஒன்று ஏறக்குறைய பூமி போலவே இருப்பதாக சில மாதங்களுக்கு முன்பு தெரியவந்தது.
அதில் உயிரினங்கள் வாழ்வதற்கான சாத்தியக்கூறு இருப்பதை விஞ்ஞானிகள் தற்போது உறுதி செய்துள்ளனர். இதுபற்றி அவர்கள் கூறியதாவது: சுமார் 600 லட்சம் கோடி கி.மீ. தூரத்தில் பூமி போலவே ஒரு கிரகம் இருப்பதை கெப்ளரில் இருக்கும் நவீன கமெராக்கள் உறுதி செய்துள்ளன.
சூரியன் போன்ற நட்சத்திரம் ஒன்றை அந்த கிரகம் பாதுகாப்பான தொலைவில் சுற்றி வருகிறது. அதன் வெப்பநிலை உட்பட பல அம்சங்களை பார்க்கும் போது உயிரினங்கள் வாழ்வதற்கான சாத்தியக்கூறு இருப்பதாகவே தெரிகிறது.
கெப்ளர் 22பி என்று அதற்கு பெயரிடப்பட்டுள்ளது. அது பூமியைவிட சுமார் 2.4 மடங்கு பெரிதாக இருக்கலாம் என்று தெரிகிறது.
 

2011ம் ஆண்டுக்கான குறும்படப்போட்டியில் 'தண்ணீர்' குறும்படத்துக்கு சிறந்த இசை விருது

ஏஏஏ மூவிஸ் நிறுவனம் நடாத்திய 2011ம் ஆண்டுக்கான குறும்படப்போட்டியில் நெடுந்தீவு முகிலனின் “தண்ணீர்” குறும்படம் சிறந்த இசைக்கான விருதையும் சிறந்த டரைக்ரர் சிறந்த குறும்படம் சிறந்த குழந்தை பாத்திரம் ஆகிய தெரிவுகளையம் தட்டிச்சென்றது.தண்ணீர் குறும்படத்திற்க்கு எஸ் யே ஸ்ரலின் இசை அமைத்திருந்தார் பாடலினை நெடுந்தவு முகிலனே எழுதியிருந்தார் பாடலே குறுப்படத்தின் உயிராகவும் பலரால் புகழ்ந்து பேசப்பட்டது குறிப்பிடத்தக்கது.

புதன், 7 டிசம்பர், 2011

வெள்ளைகாரர்களை கண்ணீர் சிந்த வைத்த வணக்கம் தாய்மண்ணே எனும் குறும்படம்!

வணக்கம் தாய்மண்ணே எனும் குறும்படமானது வார்த்தைகள் இன்றி இசைஜினால் ஆனது அது அனைத்து இன மொழி பேசும் மக்களும் புரியகுடியதாக இருந்தது அக் குறும்படம் ஓர் நிகழ்வில் திரையிடப்பட்டது அங்கு வந்த வெள்ளைகாரர்களை கண்ணீர் சிந்தினார்கள்.

சனி, 3 டிசம்பர், 2011

எதிர்வரும் 2012 ஆம் ஆண்டு உலகம் அழியாது: மாயன் கணிப்பில் மாற்றம்

எதிர்வரும் 2012 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 21ம் திகதி அன்று உலகம் அழியப் போவதாக மாயனின் அழிவுநாள் தீர்க்கதரிசனம் எடுத்துரைத்தது.
மாயன் காலண்டர் குறித்து ஆராய்ச்சி மேற்கொண்ட ஸ்வென் குரேனெமெயல்(Sven Gronemeyer) என்பவர், இந்தத் தீர்க்கதரிசனம் 1300 ஆண்டுகளுக்கு முந்தைய கல்வெட்டில் காணப்படுகிறது. ஆனால் இதைத் அனைவரும் தவறாகப் புரிந்து கொண்டுள்ளனர் என்று விளக்கம் தருகிறார்.
இவர் ஒரு ஜேர்மானியர், அவுஸ்திரேலியாவில் உள்ள லா ட்ரோபே பல்கலைக்கழகத்தில் மத்திய அமெரிக்க நாகரிகம் குறித்து ஆராய்ச்சி மேற்கொண்டு வருகிறார்.
இவர் மாயன் காலண்டர் குறித்து கூறுகையில், இந்தக் கல்வெட்டு ஹீரோகிளிஃபிக்ஸ்(hieroglyphs) என்ற எழுத்துக்களால் ஆனது. இதில் மாயனின் கடவுளான போலோன் யோக்தேயின்(Bolon Yokte) வருகை பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது.
படைப்பின் கடவுளான போலோன் யோக்தே போர்க்கடவுளாகவும் இருப்பதால் அவரது வருகையால் உலகம் அழியும், அவரை வரவேற்க அவரது பக்தர்கள் தயாராக வேண்டும் என்பது தான் இந்தக் கல்வெட்டின் வாசகங்கள் தரும் கருத்தாகும் என்றார்.
மேலும் தெரிவிக்கையில், இந்தக் கல்வெட்டில் மாயன் கடவுளின் வருகை தினம் தரப்பட்டுள்ள நிலையில், இதனை 21.12.2012 திகதி என்று உறுதியாக குறிப்பிட இயலாது.
இதை கடவுளைப் பற்றிய தகவலாக அறிந்து கொள்ள வேண்டுமே தவிர, மனிதக்குலத்தின் அழிவு பற்றிய முன்னறிவிப்பாக இக்கல்வெட்டைக் கருதக்கூடாது என்று தெரிவித்துள்ளார்.

உடல் பருமனைக் குறைக்கும் வெங்காயம்

வெங்காயம் இல்லாமல் இன்று சிற்றுண்டியோ, குழம்பு வகைகளோ, காரப் பலகார வகைகளோ செய்வதைப் பற்றி யோசிக்கவே முடியாது.
உலகிலேயே முதன் முதலாக எகிப்து நாட்டு மக்கள்தான் வெங்காயத்தைச் சரியாகவும், அதிகமாகவும் பயன்படுத்தி வந்திருக்கிறார்கள்.
எகிப்திய மக்கள் அந்நாளில் வெங்காயத்தை தெய்வீக அம்சம் பொருந்தியதாகக் கருதி வந்துள்ளனர். பக்தி பூர்வமாகச் செய்யப்படும் பெரிய பூஜைகளின்போது வெங்காயமும், வெள்ளைப் பூண்டும் பூசனைக்குரிய மூர்த்திகள் போன்ற மதிப்புடன் மரியாதையுடன் பூஜையில் இடம் பெறுவது வழக்கமாம்.
பண்டைய எகிப்திய நீதிமன்றங்களில் வழக்குகள் விசாரிக்கப்படும்போது வாதியும், பிரதிவாதியும் வெங்காயத்தின் மீது சத்தியப்பிரமாணம் எடுத்துக்கொள்ளுமாறு கோரப்பட்டனராம். அத்தனை உயர்ந்த இடம் அதற்குத் தரப்பட்டிருந்தது.
பச்சையாகவே வெங்காயம் சாப்பிடுங்கள்: வெங்காயத்தில் வைட்டமின் ‘சி’ சத்து மிகவும் அதிகமாக உண்டு. குறிப்பாக பச்சை வெங்காயத்தில் இந்தச் சத்து அதிகமாக உண்டு.
பெரும்பாலும் வெங்காயத்தை பச்சையாக உண்ணுவதன் மூலமே அதிலுள்ள சத்துக்களை முழுமையாகப் பெற முடியும். பச்சை வெங்காயத்திலுள்ள கந்தக சத்து சிலருக்கு ஒத்து வராது. அப்படிப்பட்டவர்கள் பிஞ்சு வெங்காயமாகப் பார்த்துச் சாப்பிடலாம். முற்றின வெங்காயமாக இருந்தால் வேக வைத்துச் சாப்பிடலாம்.
உடல் பருமனைக் குறைக்க: வெங்காயத்தில் கொழுப்புச் சத்து மிக மிகக் குறைவு. அதனால் உடல் பருமனைக் குறைத்துக்கொள்ள விரும்புவோர் உணவில் வெங்காயத்தைத் தாராளமாகச் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
அழகாக மாற: உதவும் இரத்த விருத்திக்கும் இரத்த சுத்தத்திற்கும் வெங்காயம் மிகவும் உதவிகரமாக இருக்கிறது. அதனால் உடல் தேஜஸ் ஏற்பட்டு அழகாகிறது. உணவோடு வெங்காயத்தைச் சேர்த்துக் கொள்ளும்போது அந்த உணவு வெகு எளிதில் ஜீரணமாக வெங்காயம் உதவுகிறது.
உஷ்ணக் கடுப்பு: அகல பல்வேறு காரணங்களால் உஷ்ணம் அதிகரிக்கும்போது வெங்காயம் உடல் உஷ்ணத்தைச் சமனப்படுத்துகிறது. நாடித் துடிப்பைச் சீராக வைத்திருக்க உதவும் ஆற்றலும் வெங்காயத்துக்கு உண்டு.
சாதாரண தலைவலிக்கு: சாதாரணமாக தலைவலிக்கு வெங்காயத்தை நசுக்கி முகர்ந்தால் உடன் குணம் தெரியும்.
விசக் கடிக்கு: வெங்காயத்தைப் பாதியாக நறுக்கி தேள், குளவி போன்ற விச ஜந்துக்கள் கடித்த இடத்தில் அழுந்தத் தேய்த்தால் வலி குறையும்.
இருமலுக்கு: பொதுவான இருமலுக்கு வெங்காயச் சாற்றை மோருடன் கலந்து குடிக்க குணமாகும். முதுமைப் பருவத்தில் தோன்றுகிற கடுமையான இருமலுக்கு வெங்காயத்தை வதக்கி வெல்லம் கலந்து சாப்பிட குணம் தெரியும்.
மூளையின் சக்தி பெருகும்: மூளையின் ஆற்றலை வலுப்படுத்தும் சக்தி வெங்காயத்துக்கு இருக்கிறது. அது நல்ல உடல் தேற்றும் டானிக்காகவும் திகழ்கிறது.
ஆகவே தினமும் வெங்காயத்தை ‘சூப்’பாகச் செய்து அடிக்கடி சாப்பிடலாம். இரவு உறங்கப் போவதற்கு முன்பு ஒரு கோப்பை வெங்காய சூப் சாப்பிடுவது மிகவும் நல்லது. வெங்காயத்தை வேக வைத்து தேன், கற்கண்டு சேர்த்துச் சாப்பிடலாம்.
பல்வலி, ஈறு வலி: பற்களில் குறிப்பாக ஈறு பகுதிகளில் வீக்கம் கண்டு சீழ் வடிவதுண்டு. அப்போது வலியும் எரிச்சலும் கடுமையாக இருக்கும். அந்தக் குறைபாட்டை அகற்ற பதமான சுடுநீரில் தாராளமாக வெங்காயச் சாற்றைக் கலக்கி வாய் கொப்பளிக்க வேண்டும்.
பிறகு வெங்காயச் சாற்றை கொஞ்சம் பஞ்சில் நனைத்து பாதிக்கப்பட்ட பற்களில் நன்றாகத் தடவி விட வேண்டும்.

வெள்ளி, 2 டிசம்பர், 2011

ஐ போன்கள் ஆபத்தானவையா?: திணறும் அப்பிள்

தொழில்நுட்பத்தில் அப்பிளின் ஐ போன்கள் முன்னணி வகிக்கின்றன என்பதில் மாற்றுக் கருத்திற்கு இடமில்லை.
அதன் ஐ பொட், ஐ போன், ஐ பேட் என அனைத்தும் உயர் தொழிநுட்பம் கொண்டவை.
எனினும் இவற்றில் அப்பிளின் ஐ போன்களின் பாதுகாப்பு குறித்து தற்போது பரவலாகப் பேசப்படுகின்றது.
அதாவது கடந்த சில தினங்களுக்கு முன்னர் அவுஸ்திரேலியாவில் விமானத்திற்குள் ஐ போன் 4 ஒன்று தீப்பற்றி எரிந்ததுடன் வெடித்த சம்பவமானது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்நிலையில் பிரேசில் நாட்டிலும் ஐ போன் 4 ஒன்று தீப்பற்றிக் கொண்டமையானது அதன் பாதுகாப்புக் குறித்து கேள்வி எழுப்பியுள்ளது.

இது குறித்துத் தெரிய வருவதாவது,ரேசிலில் பெண் ஒருவர் தனது ஐ போன் 4 வினை சார்ஜ் செய்ய சார்ஜருடன் இணைத்து விட்டு அதன் அருகில் நித்திரை செய்துள்ளார்.
சற்று நேரத்தில் அவரது ஐபோனில் இருந்து புகை கிளம்பியுள்ளதுடன், சற்று நேரத்தில் வெடித்துள்ளதுஇதன்படி இவ்வாரத்தில் பதிவான 2 ஆவது ஐ போன் தீப்பற்றிக் கொண்ட சம்பவமாக இது பதிவானது.
இரண்டு தினங்களுக்கு முன்னர் அவுஸ்திரேலியாவிலும் ஐ போன் தீ பிடித்து வெடித்த சம்பவமொன்று குறித்து செய்திகள் வெளியாகியிருந்தது.
இதன்போது விமானம் தரையிறங்கும் வேளையில் பயணி ஒருவரின் ஐ போனிலிருந்து புகை வெளியாகியிருந்ததுடன் சற்று நேரத்தில் வெடித்து தீப்பற்றியுள்ளது.
எனினும் விமானப் பணியாள் ஒருவரால் அத் தீ அணைக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து அந்த ஐ போன் பரிசோதனைகளுக்கென விமான நிலைய அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

எனினும் இவ் வெடிப்பினால் யாருக்கும் காயமெதுவும் ஏற்படவில்லை. இதற்கு முன்னரும் பிரான்ஸில் இளைஞன் ஒருவன் தனது காதலியின் ஐ போன் வெடித்தமையினால் அதன் திரையின் சிறிய கிளாஸ் துகள் தனது கண்ணைத் தாக்கியதாக 2009 ஆம் ஆண்டு காலப்பகுதியில் குற்றஞ்சாட்டியிருந்தார்.
இவ் வெடிப்புக்கான காரணங்கள் இதுவரை உறுதிப்படுத்தப்படவில்லை.மேலும் இச் சம்பவங்கள் தற்போது அப்பிளுக்கு பெரும் தலைவலியாக அமைந்துள்ளது.
இதேவேளை இம்மாத ஆரம்பத்தில் அப்பிள் தனது 1 ஆம் தலைமுறை ஐ பொட் நெனோ எம்.பி 3 பிளேயர்களை மீளப்பெற்றுக்கொள்வதாக அறிவித்திருந்தது.
இவ் ஐ பொட் நெனோ எம்.பி 3 பிளேயர்கள் 2005 மற்றும் 2006 ஆம் ஆண்டு காலப்பகுதிகளில் அப்பிள் உற்பத்தி செய்தவை. இவற்றின் பெட்டரிகளில் குறைபாடு காணப்படுவதாகவும் அவை அதிக வெப்பம் அடைவதாகவும் கூறியே மீளப்பெற்றுக்கொள்வதாகவும் அதற்காக மாற்றீடு ஒன்றை வழங்குவதாகவும் அறிவித்துள்ளது.
எது எவ்வாறு இருப்பினும் ஐ போன் வெடிப்புத் தொடர்பில் அப்பிள் பதிலெதுவும் இதுவரை கூறவில்லை.பொறுத்திருந்து பார்ப்போம் அப்பிள் இதற்கு என்ன பதில் சொல்லப் போகின்றது என்பதனை!

வியாழன், 1 டிசம்பர், 2011

இலங்கையின் முதல் தமிழ் கத்தோலிக் செய்தி இணையத்தளம் யாழ் நகரில் அறிமுகம்

இலங்கையில் முதன் முதலாக கத்தோலிக்க செய்திகளைப் பார்வையிடுவதற்காக இணையத்தளமொன்று யாழ்நகரில் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.
தமிழ் கத்தோலிக் செய்தி லங்கா இணையத்தள என்ற அவ்விணையத்தளத்தின் அறிமுக விழா கடந்த சனிக்கிழமை(26.11.2011) அன்று பிசப் சவுந்தரம் மீடியா சென்ரரால் யாழ்.மறைமாவட்ட குருமுதல்வர் அருள்கலாநிதி ஜஸ்ரின் ஞானப்பிரகாசம் அடிகளார் தலைமையில் இடம்பெற்றது.
இவ்விணையத்தளம் இலங்கையின் எல்லா மறை மாவட்டங்களின் தமிழ் கத்தோலிக்க செய்திகளை அறிக்கையிடுவதை நோக்காகக் கொண்டு ஆரம்பிக்கப்பட்டுள்ளது என ஜஸ்ரின் ஞானப்பிரகாசம் தெரிவித்தார்.
இவ்விணையத்தளத்தை tcnlnet.com எனும் முகவரியில் பார்க்க முடியும் எனவும் தெரிவித்துள்ளார்.