சனி, 3 டிசம்பர், 2011

எதிர்வரும் 2012 ஆம் ஆண்டு உலகம் அழியாது: மாயன் கணிப்பில் மாற்றம்

எதிர்வரும் 2012 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 21ம் திகதி அன்று உலகம் அழியப் போவதாக மாயனின் அழிவுநாள் தீர்க்கதரிசனம் எடுத்துரைத்தது.
மாயன் காலண்டர் குறித்து ஆராய்ச்சி மேற்கொண்ட ஸ்வென் குரேனெமெயல்(Sven Gronemeyer) என்பவர், இந்தத் தீர்க்கதரிசனம் 1300 ஆண்டுகளுக்கு முந்தைய கல்வெட்டில் காணப்படுகிறது. ஆனால் இதைத் அனைவரும் தவறாகப் புரிந்து கொண்டுள்ளனர் என்று விளக்கம் தருகிறார்.
இவர் ஒரு ஜேர்மானியர், அவுஸ்திரேலியாவில் உள்ள லா ட்ரோபே பல்கலைக்கழகத்தில் மத்திய அமெரிக்க நாகரிகம் குறித்து ஆராய்ச்சி மேற்கொண்டு வருகிறார்.
இவர் மாயன் காலண்டர் குறித்து கூறுகையில், இந்தக் கல்வெட்டு ஹீரோகிளிஃபிக்ஸ்(hieroglyphs) என்ற எழுத்துக்களால் ஆனது. இதில் மாயனின் கடவுளான போலோன் யோக்தேயின்(Bolon Yokte) வருகை பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது.
படைப்பின் கடவுளான போலோன் யோக்தே போர்க்கடவுளாகவும் இருப்பதால் அவரது வருகையால் உலகம் அழியும், அவரை வரவேற்க அவரது பக்தர்கள் தயாராக வேண்டும் என்பது தான் இந்தக் கல்வெட்டின் வாசகங்கள் தரும் கருத்தாகும் என்றார்.
மேலும் தெரிவிக்கையில், இந்தக் கல்வெட்டில் மாயன் கடவுளின் வருகை தினம் தரப்பட்டுள்ள நிலையில், இதனை 21.12.2012 திகதி என்று உறுதியாக குறிப்பிட இயலாது.
இதை கடவுளைப் பற்றிய தகவலாக அறிந்து கொள்ள வேண்டுமே தவிர, மனிதக்குலத்தின் அழிவு பற்றிய முன்னறிவிப்பாக இக்கல்வெட்டைக் கருதக்கூடாது என்று தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக