வியாழன், 7 ஜூலை, 2011

நான்.......

அன்ரன் இக்னேசியஸ் யோசப் ஆகிய​ நான், இலங்கையிலே வடக்கு மாகாணம் யாழ்பாணம், தேவாலய​ வீதியை சேந்த திரு.திருமதி லூசன் ஜோர்ஜ் யோசப் றீற்றா லீலா தம்பதிகளுக்கு நான்காவது பிள்ளையாக​ பிறந்தேன். தற்பொழுது ஜேர்மனியில் முன்சனில் எனது மனைவி பிரிசாந்தி, பிள்ளைகள் ஸ்ரெபானி, சுவேதா ஆகியொருடன் வசித்து வருகிறேன்
யாழ்ப்பாணம் சம்பத்திரிசியார்(சென் பற்றிக்)கல்லூரியில் கல்வி பயின்றேன். எனக்கு இளைய வயதில் இருந்து ஏதாவது சாதிக்க வேண்டும் என்ற​ நோக்குடன் செயல்பட்டேன். ஆவண​ சேகரிப்பில் ஈடுபட்டேன்.
1988 இல் இருந்து முத்திரைகள், முதல் நாள் தபால் உறைகள், பழைய​ புதிய​ நாணயங்கள், தமிழ் பத்திரைகள், கேலி சித்திரங்கள், வரலாற்று புத்தகங்கள், விடுதலை புலிகலின் வெளியீடுகளான​ ஒலி, ஒளி நாடாக்கள், இசைத் தட்டுகள், மற்றும் தமிழ், சிங்களம், ஹிந்தி இசைத் தட்டுக்களை சேகரித்து வருகிறேன்.
11.04.2004 இல் முன்சன் நகரில் எனது ஆவணகக் கண்காட்சி நடைபெற்றது.
சுமார் 200 நாடுகளின் பழைய​ புதிய​ பணத்தாள்கள்,150 நாடுகளின் சில்லறை நாணயங்கள், தபால் தலைகள், 95 நாடுகளின் தொலைபேசி அட்டைகள், 100 நாடுகளின் தமிழ் பத்திரிக்கைகள் எனது சேகரிப்பில் உள்ளன.