வெள்ளி, 17 பிப்ரவரி, 2012

50 வருடமாக மகன் பயன்படுத்திய பொருட்களை சேகரித்த தாய்

பெற்றோர், பிள்ளைகளின் பாசப்பிணைப்புக்கள் எல்லாம் மாயமாக மறைந்துவரும் இந்த நவீன உலகில் ஒருவரை ஒருவர் ஞாபகம் வைத்திருப்பதே பாரிய விடயமாக காணப்படுகின்றது.
இப்படியான இக்கட்டான சூழ்நிலையிலும் தாய் ஒருவர் தனது மகன் ஐம்பது வருடங்களாக பயன்படுத்திய பத்தாயிரக்கணக்கான பொருட்களை சேகரித்து வைத்து வாழ்வில் ஒருமுறை மட்டுமே கிடைக்கும் தாய், பிள்ளை பந்தத்தை அர்த்தமுள்ளதாக மாற்றி சாதனை படைத்துள்ளார்.
இச்சம்பவமானது சீனாவில் இடம்பெற்றுள்ளது. சீனாவில் வசிக்கும் பிரபல கலைஞரான சோங் டோங் என்பவரே இந்த அருமையான தாயின் பாசத்திற்கு ஆளான புனிதர் ஆவார். இதில் அவர் பாவித்த சவர்க்காரத்தின் சிறிய துண்டுகள் மற்றும் பற்பசை வெற்று டியூப்கள் அடங்கியது குறிப்பிடத்தக்கது.