திங்கள், 15 அக்டோபர், 2012

விண்ணிலிருந்து பூமியில் குதித்து உலக சாதனை படைத்த பெலிக்ஸ்

விண்வெளியிலிருந்து குதித்த வீரர் பெலிக்ஸ் பௌம்கார்ட்னர் வெற்றிகரமாக பூமித்தரையை தொட்டு உலக சாதனை படைத்துள்ளார்.
ஆஸ்திரிய பாய்ச்சல் வீரர் பெலிக்ஸ் பௌக்மார்ட்னர் தனது ஏழு வருட கடும் பயிற்சியின் பின்னர், பூமியின் ஓட்டிலிருந்து அதாவத விண்வெளியிலிருந்து பூமித்தரையை நோக்கி ஒற்றைமனிதராக குதித்து உலக சாதனை படைத்துள்ளார்.
அவர் விண்வெளியில் தனது கேப்சுலிலிருந்து குதித்து 4 நிமிடங்கள் 22 செக்கன்களில் பூமியை வந்தடைந்தார்.
விண்வெளியிருந்த குதித்ததும், அவரது பார்வை மட்டும் சிறிது மங்கலானதாக கீழே வந்து கொண்டிருந்த போது கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் அனுப்பினார்.
பூமியின் தரைப் பகுதியை நெருங்கியதும் பாரசூட்டை விடுவித்த அவர் பத்திரமாக பூமி மண்ணை தொட்டார். சாதனையை முடித்த பின் பெலிக்ஸ் கூறுகையில், இது எனது ஏழுவருட உழைப்பு, எனது மிகப்பெரும் கனவு என்று தெரிவித்தார்.
அடுத்து என்ன உங்களது திட்டம் என நிருபர் எழுப்பிய கேள்விக்கு, அடுத்த தலைமுறைக்கு இன்ஸ்பிரேஷனாக இருக்க விரும்புகிறேன். நான் உங்கள் அச்சத்தை போக்கியுள்ளேன். இனி துணிந்து களமிறங்குங்கள் இளைஞர்களே என்றார்.
பௌக்மார்ட்னரின் உலக சாதனைகள்:
1. அவர் குதித்த போது ஒரு கட்டத்தில் அவர் பயணித்து கொண்டிருந்த அதியுயர் வேகம் வேகம் 1.342 km/h என உறுதிப்படுத்தப்பட்டதால், Free Fall (தன்னிச்சையாக விழுதல்) மூலம் ஒலியின் வேகத்தை கடந்த முதல் மனிதன் எனும் மாபெரும் சாதனை.
2. உலகின் அதி உயரத்திலிருந்து குதித்த மனிதர் (120, 000 அடிக்கு மேல்).
3. பாரசூட் அல்லது பலூனில் அதிக உயரத்திற்கு சென்ற மனிதன் (120,000 அடிக்கு மேல்).
4. உலகில் தனி ஒரு மனிதருக்காக உருவாக்கப்பட்ட மிகப்பெரிய பலூன் (550 அடி உயரம், 30 மில்லியன் கியூபிக் அடி கனஅளவு).