ஞாயிறு, 30 டிசம்பர், 2012

ஓடும் பேருந்தில் கற்பழிக்கப்பட்ட மருத்துவ கல்லூரி மாணவி மரணம்


கடந்த இரு நாட்களாக சிங்கப்பூர் மவுன்ட் எலிசபெத் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த டெல்லி மாணவி உயிரிழந்தார்.
டெல்லியில் கடந்த 16-ம் திகதியன்று ஓடும் பேருந்தில் 23 வயதான மருத்துவகல்லூரி மாணவி 6 பேர் கொண்ட மர்ம கும்பலால் கற்பழிக்கப்பட்டு தூக்கி வீசப்பட்டார்.
பலத்த காயங்களுடன் அவர் டெல்லி சப்தர்ஜங் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்த சம்பவம் நாட்டையே உலுக்கியது.
இதனால் கடந்த 10 நாட்களுக்கு மேலாக மாணவர்கள், மகளிர் அமைப்பினர் டெல்லியில் பல்வேறு இடங்களில் தொடர் போராட்டங்களை நடத்தி வருகி்ன்றனர்.
இந்த விவகாரம் நாடாளுமன்றத்திலும் எதிரொலித்தது. நாட்டிற்கு ஏற்பட்ட அவமானம் எனவும், குற்றவாளிகளை தூக்கிலிட வேண்டும் எனவும் பெண் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கோரிக்கை விடுத்தனர்.
இந்த பரப்பான சூழ்நிலையில் கடந்த 26-ம் திகதியன்று நள்ளிரவில் அந்த மாணவி டெல்லி சப்தர்ஜங் மருத்துவமனையில் இருந்து தனி விமானம் மூலம் சிங்கப்பூர் கொண்டு செல்லப்பட்டார்.
அங்கு புகழ்பெற்ற மவுன்ட் எலிசபெத் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார்.
அவருக்கு தலையில் பலத்த காயமும், நுரையீரல் மற்றும் வயிற்று பகுதியில் கிருமி தொற்றும் காணப்படுவதால், அவரது நிலை தொடர்ந்து கவலைக்கிடமாக இருந்தார். செயற்கை சுவாசம் அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் இன்று அதிகாலை இந்திய நேரப்படி 2.15 மணியளவில்(சிங்கப்பூர் நேரப்படி 4.45 மணிக்கு) உயிரிழந்தார்.

திங்கள், 15 அக்டோபர், 2012

விண்ணிலிருந்து பூமியில் குதித்து உலக சாதனை படைத்த பெலிக்ஸ்

விண்வெளியிலிருந்து குதித்த வீரர் பெலிக்ஸ் பௌம்கார்ட்னர் வெற்றிகரமாக பூமித்தரையை தொட்டு உலக சாதனை படைத்துள்ளார்.
ஆஸ்திரிய பாய்ச்சல் வீரர் பெலிக்ஸ் பௌக்மார்ட்னர் தனது ஏழு வருட கடும் பயிற்சியின் பின்னர், பூமியின் ஓட்டிலிருந்து அதாவத விண்வெளியிலிருந்து பூமித்தரையை நோக்கி ஒற்றைமனிதராக குதித்து உலக சாதனை படைத்துள்ளார்.
அவர் விண்வெளியில் தனது கேப்சுலிலிருந்து குதித்து 4 நிமிடங்கள் 22 செக்கன்களில் பூமியை வந்தடைந்தார்.
விண்வெளியிருந்த குதித்ததும், அவரது பார்வை மட்டும் சிறிது மங்கலானதாக கீழே வந்து கொண்டிருந்த போது கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் அனுப்பினார்.
பூமியின் தரைப் பகுதியை நெருங்கியதும் பாரசூட்டை விடுவித்த அவர் பத்திரமாக பூமி மண்ணை தொட்டார். சாதனையை முடித்த பின் பெலிக்ஸ் கூறுகையில், இது எனது ஏழுவருட உழைப்பு, எனது மிகப்பெரும் கனவு என்று தெரிவித்தார்.
அடுத்து என்ன உங்களது திட்டம் என நிருபர் எழுப்பிய கேள்விக்கு, அடுத்த தலைமுறைக்கு இன்ஸ்பிரேஷனாக இருக்க விரும்புகிறேன். நான் உங்கள் அச்சத்தை போக்கியுள்ளேன். இனி துணிந்து களமிறங்குங்கள் இளைஞர்களே என்றார்.
பௌக்மார்ட்னரின் உலக சாதனைகள்:
1. அவர் குதித்த போது ஒரு கட்டத்தில் அவர் பயணித்து கொண்டிருந்த அதியுயர் வேகம் வேகம் 1.342 km/h என உறுதிப்படுத்தப்பட்டதால், Free Fall (தன்னிச்சையாக விழுதல்) மூலம் ஒலியின் வேகத்தை கடந்த முதல் மனிதன் எனும் மாபெரும் சாதனை.
2. உலகின் அதி உயரத்திலிருந்து குதித்த மனிதர் (120, 000 அடிக்கு மேல்).
3. பாரசூட் அல்லது பலூனில் அதிக உயரத்திற்கு சென்ற மனிதன் (120,000 அடிக்கு மேல்).
4. உலகில் தனி ஒரு மனிதருக்காக உருவாக்கப்பட்ட மிகப்பெரிய பலூன் (550 அடி உயரம், 30 மில்லியன் கியூபிக் அடி கனஅளவு).







செவ்வாய், 25 செப்டம்பர், 2012

தியானம்

தியானம்




எதிலும் ஒருங்கிணைப்பு உள்ளவர்களுக்கு எதுவுமே தியானம் ஆகி விடுகிறது என்பது தான் யதார்த்தம். மதவித்தியாசம் இல்லாமல் எந்த தெய்வத்தையும் தியானிப்பதன் மூலம் இறைக்காட்சியை பெற்று முடிவில் மோட்சத்தை பெற முடியும் என்று பக்தியோகத்தில் கூறப்படுகிறது.

எந்த தெய்வத்தை நாம் தியானிக்க விரும்புகிறோமோ அதனை இஷ்ட தெய்வம் என்கிறோம். தியானிக்க நினைக்கும் சாதகன் தனது மனதிற்கு இயைந்த இஷ்ட தெய்வத்தை எண்ணி தியானிக்கலாம்.

அந்த தெய்வம் என்பது அவனது குலதெய்வமாகவோ அல்லது வேறெந்த தெய்வமாகவோ இருக்கலாம். சிலர் தனக்கான குருவை மானசீகமாக எண்ணியிருப்பார்கள். அவர்கள் அந்த குருவிடம் தீட்சை பெற்று தியானத்தை தொடங்கலாம்.

திங்கள், 24 செப்டம்பர், 2012

வாழ்க்கையின் வெற்றிக்கு 6 வழிமுறைகள்!




தடம் பார்த்து நடப்பவன் மனிதன், தடம் பதித்து நடப்பவன் மாமனிதன் என்று சொல்வார்கள். எல்லோருக்கும் வெற்றி பெற வேண்டும் என்ற ஆசையும், மற்றவர்கள் நம்மை விரும்ப வேண்டும் என்ற எண்ணமும் இருக்கத்தான் செய்யும். வெற்றிக்கு முயற்சியும், தன்னம்பிக்கையும் போதும். வெற்றி பெற்றால் மற்றவர் உங்களை திரும்பி பார்க்கலாம், ஆனால் எல்லோரும் உங்களை விரும்பியும், நெருங்கியும் வர வேண்டுமென்றால் 6 அடிப்படை விஷயங்கள் அவசியம். அவை இங்கே…
நம்பிக்கை:
நம்மிடம் இருக்கும் சிறந்த பழக்க வழக்கங்களே பிறரை நம்மை நோக்கி ஈர்க்கும். முதலில் நமக்கு நம் மீது நம்பிக்கை இருக்க வேண்டும். நான் அழகானவ(ன்)ள் என்ற எண்ணம் உங்கள் மனதில் எப்போதும் இருக்கட்டும். அழகு என்பது சருமத்தில் மட்டுமில்லை. சருமத்தை பராமரித்து அழகு படுத்திவிடலாம். கவர்ச்சியை விட நம்பிக்கை மேலானது. நம்பிக்கையின் பலனையும், ஈர்ப்பையும் உங்கள் வெற்றி தான் மற்றவர்களுக்கு உணர்த்தும்.
நேர்த்தியான உடை:
`நான் கலராக இல்லை. எலும்பும் தோலுமாக இருக்கிறேன். எனக்கு எந்த டிரெஸ் போட்டாலும் நல்லா இருக்காது` என்று எண்ணாதீர்கள். நேர்த்தியாக உடை அணியுங்கள். உடை அணிவது ஆளைக் கவர்வதற்கல்ல என்றாலும், பார்ப்பவர்களை மதிக்கத் தூண்டுவதும் நாம் அணியும் உடை தான். அது உங்களுக்கு வசதியானதாகவும் இருக்கட்டும். நல்ல மரியாதை, நல்ல நட்பு எல்லாவற்றையுமே நல்ல ஆடைகள் உருவாக்கித் தரும். நேர்த்தியான ஆடை உங்கள் தன்னம்பிக்கையை அதிகரிக்கும்.
கனிவான பழக்கம்:
வீட்டுக்குள்ளேயே கிணற்றுத் தவளையாக முடங்கிக் கிடந்தால் இந்த உலகத்தின் அதிசயங்கள் உங்களுக்கு தென்படாமலே போகும். பழகும் வாய்ப்பை ஏற்படுத்திக் கொண்டால் தான் வெற்றியின் முகம் உங்களுக்கு காட்சி தரும். எனவே ஓய்வு நேரத்தை நண்பர்களுடன் இணைந்து சமூக சேவை செய்யும் விதமாக வெளியே கழித்தால் பலரையும் சந்திக்கும் வாய்ப்பு கிடைக்கும். அப்போது உங்களுக்கு புதிதாக பலர் அறிமுகமாகலாம். நீங்களும் முதலில் உங்களை அறிமுகம் செய்து பழக்கம் ஏற்படுத்திக் கொள்ளுங்கள். பழக பழகத்தான் நம் பலமும், பலவீனமும் தெரியும். பிறகு நம் நடையை மாற்றி வெற்றி நடை போடலாம்.
நட்பை தேர்வு செய்யுங்கள்:
வெற்றிக்குத் துணை நம்பிக்கை மட்டுமல்ல, நட்பும் தான். யாருடன் சினேகிதம் கொள்கிறோமோ அவர்களின் பழக்கம் நமக்கும் ஒட்டிக் கொள்ளும் என்று பெரியவர்கள் சொல்வார்கள். அதனால் நட்பு கொள்வதில் அதிக கவனம் அவசியம். அதேபோல அருகில் இருப்பவர்கள், உடன் பணிபுரிபவர்கள் ஆகியோருடன் நட்புறவுடன் இணக்கமாக பழகுவதும் வாழ்க்கையில் வெற்றிக்கு உதவும். உங்களின் அழைப்பை மதிப்பவருடனும், மரியாதையுடன் பழகுபவருடனும், உங்கள் நலனில் அக்கறை கொள்பவருடனும் நட்பு ஏற்படுத்திக் கொள்ளுங்கள்.
விமர்சனத்தை எதிர்கொள்ளுங்கள்:
நீங்கள் நிறைவான தோற்றத்தில் இருக்கும்போது பலரும் உங்களைப் பற்றி பேசிக் கொள்வார்கள். அதுபோல குறையான தோற்றத்தில் இருந்தாலும் பலரும் விமர்சிப்பார்கள். புகழ் பேச்சில் மயங்காமலும், குறை காணும் விமர்சனங்களில் கலங்காமலும் இருங்கள்.
விலக்க வேண்டியவை:
வெற்றிக்காக விலக்க வேண்டிய விஷயங்கள் ஏராளம் உண்டு. முதலாவது எதிர்மறையாக பேசுபவர்களை விட்டு விலகுங்கள். அடுத்ததாக நேரத்தையும், செல்வத்தையும் விரயம் செய்யும் பழக்கத்தை விட்டுவிடுங்கள். நண்பர்களுடன் அதிகமாக அரட்டையடிப்பது, தூங்கிக் கழிப்பது, தியேட்டரில் கழிப்பது போன்றவற்றை விலக்குவதன் மூலம் நேரத்தையும், செல்வத்தையும் மிச்சப்படுத்தலாம். இந்த ஆறும் இருந்தால் வெற்றி உங்களைச் சேரும், மற்றவர்களும் உங்களிடம் விரும்பி நட்பு பாராட்டுவார்கள்.

உயிரை காப்பாற்றிய நோக்கியா மொபைல் போன்? (படம் இணைப்பு)

நோக்கியா மொபைல் போன் ஒன்று ஒருவரின் உயிரை காப்பாற்றியது என்றால் நம்பமுடிகிறதா?
சிரியாவில் நடைபெற்ற துவக்குச்சூட்டு சம்பவம் ஒன்றில், துப்பாக்கி தோட்டா ஒருவரின் மார்பை குறிபார்த்து பாய்ந்தது.
அந் நிலையில் அவரின் சேட் பொக்கெட்டில் நோக்கியா தொலைபேசி இருந்ததால், அத் தொலைபேசி, குண்டை உள்வாங்கி குறித்த நபரின் உயிரை காப்பாற்றியுள்ளது.

IBM இன் புதிய அதி உயர் தொழில்நுட்ப கட்டடம் இத்தாலியில்! (படங்கள் இணைப்பு)

முன்னனி கணினி தயாரிப்பு நிறுவனமான IBM, தனது அதி உயர் தொழில்நுட்ப அம்சங்களுடன் கூடிய நவீன கிளையை இத்தாலி, ரோம் நகரில் நிறுவியுள்ளது.
Iosa Ghini Associati என்ற நிறுவனத்தால் குறித்த கட்டடம் வடிவமைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.



வியாழன், 13 செப்டம்பர், 2012

இந்த குகைகளில் வாழும் மக்களின் எண்ணிக்கை எவ்வளவு தெரியுமா?

சீனாவில் Shaanxi என்ற மாகாணத்தில் காட்சியளிக்கும் இந்த குகைகளில் வாழும் மக்களின் எண்ணிக்கை 30 மில்லியன் ஆகும்.




திங்கள், 6 ஆகஸ்ட், 2012

மன்னார் தமிழ் இளைஞனின் மகத்தான கண்டுபிடிப்பு! – (படங்கள் இணைப்பு)


மன்னார் தமிழ் இளைஞனின் மகத்தான கண்டுபிடிப்பு! – (படங்கள் இணைப்பு)

மன்னாரில் பெரிய மடுவைச் சேர்ந்த தமிழ் இளைஞன் ஒருவரால் வீட்டில் உள்ள உபகரணங்களை தொலை தூரத்தில் இருந்து கட்டுப்படுத்தக் கூடிய தன்னியங்கி இலத்திரனியல் சுற்று ஒன்று கண்டு பிடிக்கப்பட்டு உள்ளது.
மென்பொருள் பொறியியலாளரான தங்கராஜா ஷத்விதன் என்பவரே இக்கண்டுபிடிப்பை மேற்கொண்டு உள்ளார்.
மிகவும் மலிவாகவும், இலகுவாகவும் கிடைக்கக் கூடிய இலத்திரனியல் பொருட்களை கொண்டு இது தயாரிக்கப்பட்டு உள்ளது.
இக்கண்டுபிடிப்பை பயன்படுத்தி நிலக் கண்ணிவெடிகளை தூரத்தில் இருந்தவாறே அவதானிக்க கூடிய தொழிநுட்பத்தை எதிர்காலத்தில் பெற முடியும் என்று நம்பிக்கை தெரிவித்து உள்ளார் ஷத்விதன்.
இப்படியாக இன்னும் ஏராளமான தமிழ் இளைஞர்கள் வெளிச்சத்துக்கு வெளியே வராமல் உள்ளமை குறிப்பிடத்தக்கது.

ஞாயிறு, 5 ஆகஸ்ட், 2012

வரலாற்றுப் புகழ் மிக்க யாழ். நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்த நிகழ்வு (Day 09) – (வீடியோ இணைப்பு)

August 2, 2012 0
வரலாற்றுப் புகழ் மிக்க யாழ். நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்த நிகழ்வு (Day 09) – (வீடியோ இணைப்பு)
யாழ்.குடாநாட்டின் பல பகுதிகளில் இருந்தும் வருகை தந்த பக்த அடியார்கள் பெரும் எண்ணிக்கையில் ஆலயத்தில் காலை முதல் காணப்பட்டார்கள்.  பல நூற்றுக்கணக்கான ஆண்கள் அங்கப்பிரதட்ணம் செய்ததுடன் பெண்கள் அடிஅழித்தார்கள்.

வியாழன், 2 ஆகஸ்ட், 2012

உலகின் பிரசித்தி வாய்ந்த புனிதத் தலங்கள்

பொதுவாக சமயத்தின் மீது ஈடுபாடு கொண்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கின்றது. மேலும் சமய தலங்கள் பலவிதமான அற்புதங்களுடனும், அழகாகவும் காணப்படும். அவ்வாறு உலகிலேயே அதிக பிரசித்தி வாய்ந்த புனிதத் தலங்களின் தொகுப்பினைப் படத்தில் காணலாம்.










புதன், 1 ஆகஸ்ட், 2012

லண்டன் ஒலிம்பிக் தீபம் அணைக்கப்பட்டு இடமாற்றம்

Published:Tuesday, 31 July 2012
லண்டன் ஒலிம்பிக் போட்டிக்கான தொடக்க விழா கடந்த 27ம் திகதி கோலாகலமாக நடந்தது. வண்ணமயமான கலைநிகழ்ச்சிகள், வாணவேடிக்கைகள் என ஒலிம்பிக் மைதானம் களைகட்டியது.
தொடக்கவிழா நிகழ்ச்சிகளை பிரபல ஹாலிவுட் இயக்குனர் டேனி பாய்ல் வடிவமைத்திருந்தார். உலக அளவில் ரசிகர்களை பிரமிக்க வைத்த தொடக்க விழாவுக்குப் பின்பு, தடகள போட்டிகளுக்காக மைதானத்தை தயார் செய்யும் பணிகள் நடந்து வருகின்றன.
இதன் ஒரு பகுதியாக ஒலிம்பிக் சுடர் விளக்கு மைதானத்தின் வேறு பகுதிக்கு மாற்றப்பட்டது. இதையொட்டி, சுடர் தற்காலிகமாக அணைக்கப்பட்டு கிரேன்களின் உதவியுடன் தெற்கு முனைக்கு நகர்த்தப்பட்டது.
சுடர்விளக்கின் கொப்பரை, 8.5 மீட்டர் உயரம் கொண்ட ஸ்டீல் குழாய்களைக் கொண்டு அமைக்கப்பட்டுள்ளது.
மேலும், போட்டியில் பங்கேற்கும் நாடுகளை குறிக்கும் வகையில் இதில் 204 குழாய்களும் அவை ஒவ்வொன்றிலும் ஒரு நாட்டின் பெயரும் பொறிக்கப்பட்டுள்ளது. இந்த குழாய்களின் முனையில் தாமிரத்தாலான இதழ்களும் இடம் பெற்றுள்ளன.







ஞாயிறு, 29 ஜூலை, 2012

தண்ணீரை எரிபொருளாக பயன்படுத்தி காரை ஓட்டி சாதனை

Published:Sunday, 29 July 2012,
தற்போது வாகனங்கள் பெட்ரோல், டீசல், எரிவாயு போன்றவற்றை கொண்டு இயக்கப்படுகின்றன. இதன் தேவைப்பாடு அதிகரித்து விலையும் கூடி வருகிறது. இதனால் மாற்று எரிபொருளை கண்டுபிடிப்பதில் விஞ்ஞானிகள் தீவிரமாக கவனம் செலுத்துகிறார்கள்.
இதற்கிடையில் பாகிஸ்தானை சேர்ந்த இளம் என்ஜினீயரான வாகர் அகமது என்பவர் தண்ணீரை எரிபொருளாக வைத்து காரை இயக்கி அரிய சாதனையை படைத்திருக்கிறார். இந்த காரின் வெள்ளோட்டத்தை பாராளுமன்ற உறுப்பினர்கள், விஞ்ஞானிகள், மாணவர்கள் முன்னிலையில் இயக்கினார்.
இந்த புதிய தொழில்நுட்பமானது சுத்திகரிக்கப்பட்ட தண்ணீரில் (டிஸ்டில் வாட்டர்) இருந்து ஹைட்ரஜன் வாயுவை உற்பத்தி செய்து கார் என்ஜின் இயங்குகிறது. 1000 சி.சி. திறன் கொண்ட காரை ஒரு லிட்டர் தண்ணீர் மூலம் 40 கிலோ மீட்டர் தூரமும், மோட்டார் சைக்கிள்களை 150 கிலோ மீட்டர் தூரமும் இயக்க முடியும் என்றும் வாகர் அகமது கூறுகிறார்.


செவ்வாய், 24 ஜூலை, 2012

இந்த நண்டில் தெரிவது ஏசுநாதரா? ஒசாமாவா?

Published:Monday, 23 July 2012, 16:12 GMTUnder:Leisure
அமெரிக்க தலைநகர் வாஷிங்டன் அருகே உள்ள எவரெட்டில் பிடிக்கப்பட்ட நண்டின் வயிற்றுப் பகுதியில் இயேசு நாதரின் உருவம் தெரிந்துள்ளது. ஆனால் அந்த உருவம் கொல்லப்பட்ட அல் கொய்தா தலைவர் ஒசாமா பின் லேடன் போன்றும் தெரிவதாக பலர் கூறுகின்றனர்.
அமெரிக்க தலைநகர் வாஷிங்டன் அருகே உள்ள எவரெட்டில் கேன்பீல்டு குடும்பத்தார் கடந்த வாரம் நண்டு பிடித்தனர். அவர்கள் பிடித்த நண்டுகளை வீடியோ எடுத்து பார்த்த போது நண்டின் வயிற்றுப் பகுதியில் இயேசு நாதர் உருவம் தெரிந்தது.
ஆனால் அந்த உருவம் கொல்லப்பட்ட அல் கொய்தா தலைவர் ஒசாமா பின் லேடன் போன்றும் உள்ளதாக பலர் தெரிவித்தனர். அந்த உருவம் கொண்டது பெண் நண்டு என்பதால் அவர்கள் அதை கடலிலேயே விட்டுவிட்டனர். ஆனால் அவர்களிடம் உள்ள வீடியோ மட்டுமே இந்த அதிசயத்திற்கு ஆதாரம் ஆகும்.
கேன்பீல்டு குடும்பத்தார் மிகவும் நியமானவர்கள், வேண்டும் என்றே வதந்தியைக் கிளப்பி விடுபவர்கள் அல்ல என்று அவர்களை நன்கு தெரிந்தவர்கள் தெரிவித்துள்ளனர்.

நல்லூர் கந்தன் உற்சவம் இன்று கொடி ஏற்றத்துடன் ஆரம்பமானது

July 24, 2012
நல்லூர் கந்தன் உற்சவம் இன்று கொடி ஏற்றத்துடன் ஆரம்பமானது
வரலாற்றுப் புகழ்மிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்த பெருந் திருவிழா இன்று முற்பகல் 10 மணிக்குக் கொடியேற்றத்துடன் ஆரம்பமாகியது. தொடர்ந்து 25 நாள்கள் திருவிழா இடம்பெறவுள்ளது.
ஓகஸ்ட் 2 ஆம் திகதி வியாழக்கிழமை மஞ்சம் மாலை 5 மணிக்கு மஞ்சத் திருவிழாவும் 10 ஆம் திகதி வெள்ளிக்கிழமை கார்த்திகை திருவிழாவும் 12 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை சந்தான கோபாலர் திருவிழாவும் அன்று மாலை கைலாச வாகனத் திருவிழாவும் இடம்பெறும்.
ஓகஸ்ட் 13 ஆம் திகதி காலை கஜவல்லி, மகாவல்லி திருவிழாவும் மாலை வேல் விமானமும் இடம்பெறும். 14 ஆம் திகதி தண்டாயுதபாணி திருவிழாவும் மாலை ஒருமுகத் திருவிழாவும் 15 ஆம் திகதி சப்பரத் திருவிழாவும் இடம் பெறும். ஓகஸ்ட் 16 ஆம் திகதி வியாழக்கிழமை தேர்த்திருவிழா இடம்பெறும். மறுநாள் 17 ஆம் திகதி தீர்த்தத் திருவிழா இடம்பெறும். 18 ஆம் திகதி பூங்காவனமும் 19 ஆம் திகதி வைரவர் திருவிழாவும் இடம்பெற்றுத் திருவிழா நிறைவடையும்.
கடந்த ஆண்டுகளை விட இந்த முறை அதிக எண்ணிக்கையான அடியவர்கள் திருவிழாவில் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.