வெள்ளி, 21 அக்டோபர், 2011

உலக செல்வந்த நாடுகள் பட்டியலில் முதலாம் இடத்தில் சுவிஸ்!

உலக செல்வந்த நாடு என்ற பெயரைக்கொண்ட நோர்வையை சுவிஸ் முந்திவிட்டதாக வெளியான அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


உலகில் செல்வந்த நாடு என்ற பட்டியலில் முதலாம் இடத்திற்கு சுவிஸ் வந்துள்ளது.

இரண்டாம் இடத்தில் நோர்வேயும், மூன்றாம் இடத்தில் ஒஸ்ரேலியாவும், நான்காம் இடத்தில் சிங்கப்பூரும் உள்ளன.

இந்த வருடத்தில் சுவிஸ் பிறாங்கின் பெறுமதி அதிகரித்ததன் காரணமாகவே சுவிஸ் செல்வந்தநாடுகள் பட்டியலில் முதலாம் இடத்திற்கு வந்துள்ளதாக பொருளியல் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

சராசரி சுவிஸ் பிரசை 207.393 ஆயிரம் யூரோ வைத்திருக்கிறார்கள் என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிகரித்த சம்பளம், சுவிஸ் பிறாங்கின் பெறுமதி அதிகரிப்பு ஆகியன தலா வருமான அதிகரிப்புக்கு காரணம் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. 21 Oct 2011