ஆந்திர மாநிலம் விசாகபட்டினத்தில் கடந்த செப்டம்பரில் 117 அடி உயரம் உள்ள பிரமாண்டமான விநாயகர் சிலை நிறுவப்பட்டது. இந்த ஆண்டில் நிறுவப்பட்ட சிலைகளுள் மிகவும் உயரமானது இந்த சிலை.
இதன் திறப்பு விழாவையொட்டி பிரமாண்டமான லட்டு தயாரிக்கப்பட்டது. இதன் எடை 5,570 கிலோ.
தப்பேஸ்வரத்தில் ரியல் எஸ்டேட் வர்த்தகத்தில் ஈடுபட்டுள்ள சுவர்ணபூமி டெவலப்பர்ஸ் நிறுவனம் சார்பில் இந்த லட்டு தயாரிக்கப்பட்டது.
பிரிட்டனில் உள்ள இந்து கோயில் ஒன்றில் தயாரிக்கப்பட்ட 551 கிலோ எடை கொண்ட லட்டுதான் இதுவரை உலகின் மிகப் பெரிய லட்டாக இருந்தது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக