திங்கள், 19 செப்டம்பர், 2011

உலகத்தமிழ்ப் பண்பாட்டு இயக்க 11வது உலக மாநாடு



உலகத் தமிழ்ப் பண்பாட்டு இயக்கத்தின் “செந்தமிழ் மாலை 2011“ ஜேர்மனியிலும்

1974 ம் ஆண்டு யாழ்ப்பாணத்தில் தோற்றம் பெற்று உலகெங்கும் கிளைகளைப் பரப்பி தென்னாபிரிக்காவைத் தலைமையகமாகக் கொண்டியங்கிவரும்  உலகத் தமிழ்ப் பண்பாட்டு இயக்கம்  தனது 37வது  அகவையில் அதன் ஐரோப்பிய ஒன்றிய கிளையானது பிரான்சு நாட்டின் தலைநகரில் 11வது  உலகத்தமிழ் மகாநாட்டையும், சுவிற்சலாந்து ஜேர்மன் நாடுகளில்
செந்தமிழ் மாலை 2011 எனும் முத்தமிழ் விழாவினையும் ஏற்பாடுசெய்துள்ளது.
 
ஜேர்மனியில் ëப்பெற்றால் நகரில் ; Hünefeldstr. 63 B, 42285 Wuppertal Barmen முகவரியில் (சிறி நவதுர்க்காதேவி ஆலயத்திற்கு அருகாமையில்) 03-10-2011 திங்கட்கிழமை Wupper Halle  மண்டபத்தில் “செந்தமிழ் மாலை 2011“எனும் மாபெரும் முத்தமிழ் விழாவினை உலகத் தமிழ்ப் பண்பாட்டு இயக்கத்தின் ஐரோப்பிய ஒன்றிய ஜேர்மன்  கிளையானது  ஏற்பாடு செய்துள்ளது.
 
இலங்கை இந்தியா மலேசியா கனடா அமெரிக்கா தென்னாபிரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளிலிருந்தும் உலகத்தமிழறிஞர்களும் தமிழுணர்வாளர்களும் தமிழர்பிரதிநிதிகளும் உலகத் தமிழ்ப் பண்பாட்டு இயக்க செயற்பாட்டாளர்களும் நிகழ்வில் கலந்து சிறப்பிக்கவுள்ளனர்.
இவ்விழாவில் சிறப்பாக ஜேர்மன் முன்னணி இயல் இசை நாடகக் கலைஞர்களுடன் முன்னணி இசை நடனக் கல்;Â ரிகளின் மாணவ மாணவியர்களும் இந்திய மலேசிய கலைஞர்களும் இணைந்து வழங்கும் தமிழர் கலை பண்பாட்டு விழுமியங்களை தாங்கிவரும் முத்தமிழ்க் கலைநிகழ்வுகளுடன் சிறப்பு விருந்தினர்களின் சிறப்புரைகளும் நடைபெறவுள்ளது.
 
தாயகத் தமிழர்களின் நிலையுணர்த்தும் புலம்பெயர்வாழ் தமிழர்களின் உணர்வுகளை ஒருங்கிணைத்து உலகத் தமிழ்க் குரலாய் ஓங்கி ஒலிக்க  ஜேர்மனியில்  உள்ள அனைத்து பொது அமைப்புக்களினதும் தனியார் நிறுவனங்களினதும் தார்மீக ஆதரவையும் ஒத்துழைப்பையும் வேண்டி  ஜேர்மன் வாழ் அனைத்துத் தமிழ் உறவுகளையும் தமிழ் உணர்வாளர்களையும் அன்புடன் அழைக்கின்றது உலகத் தமிழ்ப் பண்பாட்டு இயக்கம் ஐரோப்பிய ஒன்றியம் - ஜேர்மனி 
பேதமை மறந்து தமிழ் காக்க தமிழால் இணைவோம்.
 
 
நன்றி
தொடர்புகளுக்கு
விழா அமைப்பாளர்கள்
இரவீந்திரன்  02381956609
இராஜசூரியர் 017674540531
பரமேஸ்வரன் 017374557714



உலகத் தமிழ்ப் பண்பாட்டு இயக்கம்
ஐரோப்பிய ஒன்றியம்
 

உலகத் தமிழ்ப் பண்பாட்டு இயக்க ஜரோப்பிய ஒன்றிய பிரான்ஸ் கிளை நடாத்தும் 11 வது உலகத் தமிழ்ப் பண்பாட்டு மாநாடு செப்டம்பர் 24ம், 25 ம் திகதிகளில் பிரான்ஸில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
உலகத்தமிழ்ப்பண்பாட்டு இயக்க ஜரோப்பிய ஒன்றிய மாநாட்டு அமைப்பாளரும் செயலாளர் நாயகமுமாகிய துரை கணேசலிங்கம், உலகத் தமிழ்ப் பண்பாட்டு இயக்க ஜரோப்பிய ஒன்றிய செயலாளரும் மாநாட்டின் துணைத் தலைவருமாகிய இ.ராஜசூரியர், உலகத் தமிழ்ப் பண்பாட்டு இயக்க ஜரோப்பிய ஒன்றிய பிரான்ஸ் கிளைத் தலைவரும் மாநாட்டு தலைவருமாகிய விசு செல்வராசா, உலகத் தமிழ்ப் பண்பாட்டு இயக்க ஜரோப்பிய ஒன்றிய பிரான்ஸ் கிளை செயலதிபரும் மாநாட்டின் செயலாளருமாகிய ம. இரவீந்திரநாதன் ஆகியோர் இணைந்து ஊடகங்களுக்கு அனுப்பி வைத்த அறிக்கையில் இதனைத் தெரிவித்துள்ளனர்.
அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்ட விபரங்கள்:
உலகத் தமிழ்ப் பண்பாட்டு இயக்கத்தின் ஜரோப்பிய ஒன்றியத்தின் பிரான்ஸ் கிளையினால் இவ் ஆண்டு புரட்டாதி மாதம் 24, 25 ம் திகதிகளில் திருவள்ளுவர் ஆண்டு 2042  சனி ஞாயிறு இரு தினங்களில் பிரான்ஸில் எவ்றி மாநகரில் வெகு சிறப்பாக நடைபெற உள்ளது.
இவ் இயக்கம் தென் ஆபிரிக்காவை தலைமையகமாகக்கொண்டு செயற்பட்டு வருவதோடு உலகத்தமிழ் மக்களை ஒன்றிணைப்பதில் பெரும் வெற்றியும் கண்டுள்ளது.
இவ் இயக்கத்தின் கிளைகள் 42 நாடுகளில் அமைக்கப்பட்டுள்ளது. இதுவரை 1977ல் சென்னையிலும். 1980ல் மொரீஸிசியசிலும் 1985ல் சேலத்திலும்.1989ல் மலேசியாவிலும்.1992ல் அவுஸ்ரேலியாவிலும். 1996ல் கனடாவிலும்.

1999ல் சென்னையிலும். 2001ல் தென் ஆபிரிக்காவிலும். 2004ல் புதுவையிலும்.2007ல் மலேசியாவிலும் ஆக பத்து உலகத்தமிழ் மாநாடுகளை நடத்திய பெருமையோடு 11வது வரலாற்று சிறப்பு மிக்க மாநாடு பிரான்ஸ் தலைநகரில் நடைபெற உள்ளது.
உலகத் தமிழர் மொழி, பண்பாட்டு. வாழ்வியல் மேம்பாடு என்ற கருப்பொருளில் வெகு சிறப்பாக நடைபெற உள்ளது.
இதுவரை இவ் இயக்கம் உலகளாவிய மாநாடுகளின் மூலம் தமிழர் கலைகள் பண்பாடு ஊக்குவிப்பு.தமிழ் ஆண்டு, தமிழ் மொழிக்கல்வி. தமிழர் வரலாற்று ஆவண சேமிப்பு. தூய தமிழ் வழக்கு. தமிழ் செம்மொழி உருவாக்கம். உலகத்தமிழர் ஒற்றுமை பேணல்.முதலான விடயங்களில் பல சாதனைகளை நிலை நாட்டியுள்ளது.
இந்த நோக்கத்துடன் தமிழ் வழி இறை வழிபாடு. தமிழ் மரபுகளை நிலைப்படுத்துதல்.தமிழர் இறையாண்மை. தமிழ்ப்பாதுகாப்பு. தமிழ்க்கலை மீட்பு.
தமிழ்க் கல்வி. தமிழர் நிறுவனங்கள் ஒருங்கிணைப்பு.மறைந்த மறைக்கப்பட்ட தமிழர் வரலாற்றுத் தேடல்கள்.எதிர்காலத் தமிழினம் எதிர்நோக்கும் சவால்கள். தமிழ் ஊடகங்கள். போன்ற விடயங்கள் ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளப்பட்டு தீர்மானம் நிறைவேற்றப்படும்.
மாநாட்டு ஆய்வுகளும் தமிழ் அறிஞர்கள் துறைசார் புத்தாய்வுகளும் கொண்ட மாநாட்டு மலர் வெளியிடப்படும்.
மாநாட்டில் தமிழ் மொழி. தமிழ் இனம். தமிழ்ப்பண்பாடு. தொடர்பான ஆவணக்காட்சியும். தமிழர் வாழ்வியல் வரலாறு. மொழி இலக்கியம் சார்ந்த நூல்கள். இறுவெட்டுக்கள். ஒலி இழை நாடாகள். நிழற்படங்கள். முதலியன கண்காட்சிக்கு வைக்கப்படும். அத்துடன் மா நாட்டுக் கருப்பொருளை ஒட்டி உலகளாவிய கட்டுரைப் போட்டி. கவிதைப் போட்டி. என்பன இடம் பெறுவதுடன் உலகளாவிய அளவில் தெரிவு செய்யப்பட்டு விருதுகள் வழங்கப்படும்.
உலகளாவிய தமிழர் சமூகத்தை மொழியாலும் பண்பாட்டாலும் ஒருங்கிணைக்க வேண்டும் என்ற உயர்ந்த நோக்குடனும் இலங்கை இந்திய நாடுகளில் தமிழர்கள் தலை நிமிர்ந்து வாழ வேண்டும் குறிக்கோளுடனும் அரசியல் சார்பற்று இன மத பேதங்களைக் கடந்து தமிழ்ப் பண்பாட்டாளர் என்ற ஒரே குடையின் கீழ் செய்ற்படுவதற்கும் தமிழ் மொழியை மறந்தவர்களை மொழி உணர்வாளர்களாக மாற்றும் நேர்த்தியான கொள்கைகளுடனும் 1974 ம் ஆண்டு தை திங்கள் 8ம் நாள் யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற உலகத் தமிழாராய்ச்சி மா நாட்டில் பல நாட்டு அறிஞர்கள் ஒன்றிணைந்து உலகத் தமிழ்ப் பண்பாட்டு இயக்கத்தை உருவாக்கினார்கள்.
எனவே வரலாற்று சிறப்பு மிக்க இந்த மாநாட்டில் கலந்து கொள்ள விரும்புவோர்கள் மா நாட்டு மலருக்கு ஆக்கங்களைத்தர விரும்புவோர்கள். கண்காட்சிகளில் இணைந்து கொள்ள விருபுவோர்கள். அனைவரும் வரும் 31.07.2011 க்கு முன்பாக மாநாட்டுப்பணிமனையுடன் தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தொடர்புகளுக்கு மின்அஞ்சல்
Imtc1974@yahoo.com
mictefr@hotmail.fr
ravien1952@live.fr

 
1974 ம் ஆண்டு யாழ்ப்பாணத்தில் தோற்றம் பெற்று உலகெங்கும் கிளைகளைப் பரப்பி தென்னாபிரிக்காவைத் தலைமையகமாகக் கொண்டியங்கிவரும் உலகத் தமிழ்ப் பண்பாட்டு இயக்கம் தனது 37வது அகவையில் அதன் ஐரோப்பிய ஒன்றிய கிளையானது பிரான்சு நாட்டின் தலைநகரில் 11வது உலகத்தமிழ் மகாநாட்டையும் சுவிற்சலாந்து ஜேர்மன் நாடுகளில் செந்தமிழ் மாலை 2011 எனும் முத்தமிழ் விழாவினையும் காண்கிறது.
அந்தவகையில் சுவிற்சர்லாந்தில் Zürich மாநிலத்தில் 01-10-2011 சனிக்கிழமை .Gemeindezentrum Brüelmatt, Dorfstr 10, 8903 Birmensdorf. மண்டபத்தில் “செந்தமிழ் மாலை 2011“எனும் மாபெரும் முத்தமிழ் விழாவினை உலகத் தமிழ்ப் பண்பாட்டு இயக்கத்தின் சுவிற்சர்லாந்து கிளை ஏற்பாடு செய்துள்ளது இலங்கை இந்தியா மலேசியா கனடா அமெரிக்கா தென்னாபிரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளிலிருந்தும் உலகத்தமிழறிஞர்களும் தமிழுணர்வாளர்களும் தமிழர்பிரதிநிதிகளும்
உலகத் தமிழ்ப் பண்பாட்டு இயக்க செயற்பாட்டாளர்களும் பேராளர்களாக நிகழ்வில் கலந்து சிறப்பிக்கவுள்ளனர்.
ஆத்தோடு சுவிற்சலாந்தின் முன்னணி இயல் இசை நாடகக் கலைஞர்களுடன் முன்னணி இசை நடனக் கல்Âரிகளின் மாணவ மாணவியர்களும் இந்திய மலேசிய கலைஞர்களும் இணைந்து வழங்கும் தமிழர் கலை பண்பாட்டு விழுமியங்களை தாங்கிவரும் முத்தமிழ்க் கலைநிகழ்வுகளுடன் சிறப்பு விருந்தினர்களின் சிறப்புரைகளும் நடைபெறவுள்ளது.
தமிழ்ச்சிறார்களின் தமிழ்மொழித்திறன் விருத்தியை ஊக்குவிக்கும் நோக்குடன் திருக்குறழ் மனனப்போட்டி நிகழ்வும் நடைபெற உள்ளது ஈழத் தமிழர்களின் இன்றைய நிலைமைகளையும் புலம்பெயர்வாழ் தமிழர்களின் உணர்வுகளையும் ஒருங்கிணைத்து உலகத் தமிழர்களின் குரலாய் ஓங்கி ஒலிக்க சுவிற்சர்லாந்தில் உள்ள அனைத்து பொது அமைப்புக்களினதும் தனியார் நிறுவனங்களினதும் தார்மீக ஆதரவையும் ஒத்துழைப்பையும் வேண்டி சுவிஸ்வாழ் அனைத்துத் தமிழ் உறவுகளையும் தமிழ் உணர்வாளர்களையும் அன்புடன் அழைக்கின்றது உலகத் தமிழ்ப் பண்பாட்டு இயக்கம் ஐரோப்பிய ஒன்றியம் - சுவிற்சர்லாந்து
தமிழ் காக்க தமிழால் இணைவோம்
நன்றி
செ.சிவராசசிங்கம்
அமைப்பாளர்
உலகத் தமிழ்ப் பண்பாட்டு இயக்கம் - ஐரோப்பிய ஒன்றியம் - சுவிற்சர்லாந்து
தொடர்புகளுக்கு
சிவம் 062 929 05 78
சிவா 079 261 75 73
உதயன் 078 675 65 94
imtcswiss@yahoo.com

 
உலகத் தமிழ்ப் பண்பாட்டு இயக்கத்தின் 11 வது அனைத்துலக மாநாடு எதிர்வரும் செப்டம்பர் மாதம் 24, 25 ம் திகதிகளில் பிரான்ஸ் தேசத்தின் பாரிஸ் நகர் அருகில் உள்ள எவ்ரி நகரில் காலை 9 மணி முதல் இரவு 11 மணி வரை நடைபெறவுள்ளது.
இந்நிகழ்வில் ஒவ்வொரு நாளும் இசை, நாட்டியம், கலை நிகழ்ச்சிகள், இலக்கிய சொற்பொழிவுகள், தமிழ் மொழி வளர்ச்சிப் பொருட்டான ஆய்வுக் கட்டுரைகள், தமிழர் பொருளாதார மேம்பாட்டுத் திட்டங்கள், அவர்தம் பாதுகாப்பு, பண்பாட்டு மேலாண்மை, உலகத்தமிழர் ஒருங்கிணைப்பு ஆகியவை பொருட்டு தமிழ் பேராளர்களும், அறிஞர் பெருமக்களும், தேசிய அரசியல் தலைவர்களும், சமய, கலை, இலக்கிய முன்னோடிகளும் வருகை தந்து கருத்துக்களை வழங்க உள்ளனர்.
இயக்கத்தின் மூத்த துணைத்தலைவர் திரு. வேல்பிள்ளை மற்றும் இந்திய ஒன்றியத் தலைவர். வழக்கறிஞர், கலைமணி  ஆகியோரின் நேரிடை அழைப்பின் பேரில் தமிழகத்திலிருந்து தென்னிந்திய திரைப்பட இயக்குனர் பாரதிராசா, விடுதலைச் சிறுத்தைக் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன், டாக்டர் சீர்காழி சிவசிதம்பரம், அறிஞர் மறவன்புலவு சச்சிதானந்தம், உலகத் தமிழர் பேரவைத் தலைவர் அறிஞர் ஜனார்த்தனம், பன்னாட்டு தமிழ் உறவு மன்றத் தலைவர் பெருங்கவிக்கோ வா.மு.சேதுராமன் ஆகியோருடன் பல தமிழ் அறிஞர்களும், உணர்வாளர்களும் கலந்து கொள்கின்றனர்.
நடந்தவை அனைத்தும் தமிழர் நெஞ்சில் தணலாக கனிந்து கொண்டிருந்தாலும், வரும் காலத்தில் நடந்தவைகளின் மீளாய்வு, அதன் எதிர்கால வியூகம், அனைத்து தமிழர்களின் ஒற்றுமை ஆகியவை பற்றி தீர்மானிக்க வேண்டிய நிலையில் அங்கே நாம் ஒன்று கூடுகின்றோம்.
அவரவர் கருத்துக்களை தடையின்றி பரிமாறிக் கொள்வதற்கு அங்கே இடமுண்டு. மேற்கூறிய முக்கிய தலைப்புக்களில் தமிழ்த் தமிழர் முன்னேற்றம், வளம் ஆகியன பற்றி ஒரு இறுதி தீர்மானத்தை ஏற்பதற்கு இந்த மாநாடு வழிவகுக்கும். எனவே உலகத் தமிழர் யாவரும் அங்கே ஒன்று கூடுதல் அவசியம்.
வாருங்கள் தமிழர்களே! நமக்கென அமையும் ஒரு நல் வாய்ப்பை நல்ல முறையில் பயன்படுத்துவோம். இனி தமிழர்களுக்கு விடிவு மட்டுமே என்ற உறுதியோடு களமிறங்குவோம். உலகமெலாம் நிறைந்துள்ள ஒரே இனம் நம் தமிழினம்தான். அரசியல் இடர்ப்பாடுகளும்,தொலைவும், பிரிவும் நம் இனத்தை மீளமுடியா இழப்புகளில் செலுத்திக் கொண்டுள்ளன.
அடுத்து வரும் சந்ததியினருக்கு நம் மொழி, இன, பண்பாடு பற்றி அறிய முடியா நிலையில் உலகத் தமிழ்ப் பண்பாட்டு இயக்கத்தின் இது போன்ற மாநாடுகள் நம்மை ஒன்று திரட்டி, மொழியால், இனத்தால், பண்பாட்டால் இணைக்கும் பணி மிக மிக அவசியமானதுதான்.
நாம் இழந்தவைகளை மறுபரிசீலனை செய்து மேலான செயல் திட்டங்களுக்கு நாம் ஒன்று கூடுதல் அவசியம். தமிழர்கள் எங்கிருப்பினும் வாழும் நாட்டால், அரசியல் மாறுபாட்டால் பிரிந்து விடாமல் அனைவரும் ஒரே இனம், ஒரே மொழியினர் என்ற உண்மையின் அடிப்படையில் எல்லோரும் தமிழரே என்ற உணர்வோடு இனியாவது ஒரு இறுதி முடிவு எடுப்போம்.
மொழி வளம் ஒரு இனத்தின் வளம். ஒரு இனத்தின் வளம் அதன் பண்பாட்டின் வளம். எனவே தமிழர் தோள் உயர்ந்தால் இனி தோல்வியில்லை - வெற்றி ஒன்றே என்ற சிந்தனையோடு தமிழர்கள் அனைவரும் ஒன்று கூடுவோம். தமிழன் வீழ்ந்தால் முட்டுக்கொடுப்போம்.
அவனே நன்கு வாழ்ந்தால் தட்டிக் கொடுப்போம். நம்மை எது பிரிக்கிறதோ அதனை விளக்கி வைப்போம் - எது ஒன்று சேர்க்கிறதோ அதனை இறுக்கிப் பிடிப்போம்.

நமக்கு விடிவு தரும் முடிவுகள் அங்கேதான் காத்திருக்கின்றன என்ற தெளிந்த உணர்வோடு. நாம் ஒன்றுபட்டால் என்றும் நமக்கு வீழ்ச்சியில்லை. வாருங்கள் வடம் பிடிப்போம். தமிழ்த் தேரினை ஒன்றாக சேர்ந்து இழுத்து நிலை நிறுத்துவோம்.
நமது மொழி, இனம், வாழும் மண், உறவுகள் அனைத்தும் எழுச்சி பெற இம்மாநாடு நல்லதொரு வழி வகுக்கும் என்ற நம்பிக்கையோடு தமிழர்களே அணி திரள்வீர்.
நாம் இன்றி நாடில்லை-பெரும் பேரில்லை என சங்கநாதம் செய்து, பாரிஸ் மாநகர் நோக்கி திரளுங்கள்.


தலைவர்,
இந்திய ஒன்றியம்,
உலகத் தமிழ்ப் பண்பாட்டு இயக்கம்
மின்னஞ்சல்: imtc1951@yahoo.in

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக