சனி, 10 செப்டம்பர், 2011

ஐ. நா : மனித உரிமை பேரவை நிகழ்ச்சி நிரலில் இலங்கை விவகாரம் இல்லை!

ஐக்கிய நாடுகள் சபை மனித உரிமைப் பேரவைக்கு பான் கீ மூனின் நிபுணர் குழு அறிக்கையை அனுப்புவது எனத் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக செய்திகள் முன்னர் வெளிவந்துள்ள நிலையில் ஏலவே தயாரிக்கப்பட்ட நிகழ்ச்சி நிரலில் அது உள்ளடக்கப்படவில்லை எனத் தற்போது தகவல்கள் வெளிவந்துள்ளன.

ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகமான பான் கீ மூனினால் இலங்கை அரசின் யுத்தக் குற்றங்கள் தொடர்பில் ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிப்பதற்காக நியமிக்கப்பட்டிருந்த நிபுணர் குழுவின் அறிக்கையை மனித உரிமைப் பேரவையில் சமர்ப்பிப்பதா இல்லையா இல்லை என்ற நிலையிலேயே அதனை மனித உரிமைப் பேரவைக்கு அனுப்புவது எனத் தற்போது தீர்மானிக்கப்பட்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

இருப்பினும் ஐநா மனித உரிமைக் குழுக் கூட்டத்தின் நிகழ்ச்சி நிரலில் இலங்கை தொடர்பான விடயங்கள் உள்ளடக்கப்படவில்லை தெரிய வருகிறது. அத்துடன் ஐநாவின் நிபுணர் குழு அறிக்கையினை எதிர்வரும் கூட்டத்தில் சமர்ப்பிப்பது குறித்த முடிவுகள் பற்றி ஆணையாளர் நவநீதம் பிள்ளையும் எதனையும் குறிப்பிடவில்லை என தெரிவிக்கப்படுகிறது.

போர்க்குற்ற அறிக்கை மனித உரிமைப் பேரவைக்குச் செல்கிறது.

ஐக்கிய நாடுகள் சபை மனித உரிமைப் பேரவைக்கு பான் கீ மூனின் நிபுணர் குழு அறிக்கையை அனுப்புவது எனத் தீர்மானிக்கப்பட்டுள்ளதாகச் சற்று நேரத்துக்கு முன்னர் கிடைத்த செய்தி ஒன்று தெரிவித்துள்ளது.

ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகமான பான் கீ மூனினால் இலங்கை அரசின் யுத்தக் குற்றங்கள் தொடர்பில் ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிப்பதற்காக நியமிக்கப்பட்டிருந்த நிபுணர் குழுவின் அறிக்கையை மனித உரிமைப் பேரவையில் சமர்ப்பிப்பதா இல்லையா இல்லை என்ற நிலையிலேயே அதனை மனித உரிமைப் பேரவைக்கு அனுப்புவது எனத் தற்போது தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக