ஞாயிறு, 4 செப்டம்பர், 2011

சிறிலங்காவின் ஆவணப்படம் ஐ.நாவில் � ஏட்டிக்குப் போட்டியான பரப்புரை (வீடியோ இணைப்பு)

சனல்-4 தொலைக்காட்சி தயாரித்து வெளியிட்ட ‘சிறிலங்காவின் கொலைக்களங்கள்‘ ஆவணப்படத்துக்குப் போட்டியாக, சிறிலங்கா அரசாங்கம் தயாரித்துள்ள ஆவணப்படமும் ஐ.நா வளாகத்தில் காண்பிக்கப்படவுள்ளது.

'Lies Agreed Upon' என்ற பெயரில் சிறிலங்கா பாதுகாப்பு அமைச்சு தயாரித்துள்ள இந்த ஆவணப்படத்தை ஐ.நா வளாகத்தில் Dag Hammarskjold மண்டபத்தில் எதிர்வரும் செப்ரெம்பர் 6ம் நாள் பிற்பகல் 2 மணியளவில் திரையிடப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிகழ்வில் பங்கேற்குமாறு ஐ.நா வை தளமாகக் கொண்டு செயற்படும் ஊடகவியலாளர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இந்த ஆவணப்படம் திரையிடப்பட்ட பின்னர் ஐ.நாவுக்கான சிறிலங்காவின் வதிபிடப் பிரதிநிதி கலாநிதி பாலித கொஹன்னவும், பிரதி வதிவிடப் பிரதிநிதி மேஜர் ஜெனரல் சவீந்திர சில்வாவும் கேள்விகளுக்குப் பதிலளிக்கவுள்ளனர்.

சிறிலங்காவின் கொலைக்களங்கள் ஆவணப்படம் ஐ.நா வளாகத்தில் உள்ள தேவாலய நிலையத்தில் திரையிடப்பட்டிருந்தது.

அதற்குப் போட்டியாகவே சிறிலங்கா அரசும் இந்த ஆவணப்படத்தை முதல் அவென்யூவில் திரையிடவுள்ளது.

இதன்மூலம் ஐ.நா வளாகத்தை சிறிலங்கா அரசு பரப்புரைக் களமாக மாற்ற முனைவதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக