புதன், 11 ஏப்ரல், 2012

நிலநடுக்கம்! - இலங்கை உட்பட 28 நாடுகளில் சுனாமி எச்சரிக்கை - அச்சத்தில் மக்கள்

இலங்கையில் சற்று முன்னர் இன்று(11.04.2012) பிற்பகல் 2.20 மணியளவில் சிறியவான பூமியதிர்வு ஏற்பட்டதை உணர முடிந்தது. கொழும்பில் 30 செக்கன் வரை இவ்வதிர்வை உணரமுடிந்தது என மக்கள் தெரிவித்துள்ளனர்.
எனினும் இந்த அதிர்வானது 2004 இல் சுனாமி ஏற்படுவதற்கு முன்பு ஏற்பட்ட பூமியதிர்வைப் போன்று இருந்ததாக மக்கள் அச்சம் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை, நாட்டின் சில பகுதிகளில் நில  நடுக்கம் உணரப்பட்டதாக தெரியப்படுகிறது.
இலங்கையில் நிலநடுக்கம் உணரப்பட்ட இடங்களும் நேரங்களும் ரிக்டர் அளவுகளும் வருமாறு:
தேவேந்திர முனை முற்பகல் 10. 39  ரிக்டர் 5.9
திருகோணமலை  முற்பகல் 10.51 ரிக்டர் 8.7
கொழும்பு முற்பகல் 11.20 ரிக்டர் 6.9
யாழ்ப்பாணம் பிற்பகல் 12.31 ரிக்டர் 9.9
தலைநகரம் கொழும்பில் இவ்வாறான ஒரு உணர்வு ஏற்பட்டதாகவும், தொடர் மாடிகளில் உள்ளோர் மற்றும் அனைவரும் பீதியில் வெளியே ஓடிச் சென்றதாகவும் தற்சமயம் நடுக்கம் அற்றுப் போய் உள்ளதாகவும் அறிய முடிகிறது.
யாழ்ப்பாணத்தில் பெரிய கட்டிடங்களில் இந்நில நடுக்கத்தினை நன்கு உணரமுடிந்ததாகவும், வீரசிங்கம் மண்டபம், யாழ் பொதுநூலகம் போன்ற கட்டிடங்களில் இருந்தோர் பீதியில் வெளியில் ஓடிவந்தனர் எனவும் மக்கள் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை யாழ் கரையோர மக்களை பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு யாழ்.பொது அமைப்புக்கள் சுனாமி எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
யாழில் சித்திரைப் புத்தாண்டு குதூகலத்தில் இருக்கும் மக்கள் இந்நில நடுக்கத்தினால் அச்சத்தில் உள்ளனர்.
இன்று உணரப்பட்ட நில அதிர்வு மலையகப்பகுதிகளிலும் உணரப்பட்டுள்ளதாக பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர். இன்று பிற்பகல் 2 .15 மணியளவில் நுவரெலியா, நாவலப்பிட்டி, நானுஓயா, அட்டன், கொட்டகலை, டிக்கோயா போன்ற பகுதிகளிலும் இந்த நில அதிர்வு உணரப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
அத்தோடு இலங்கையின் கரையோரப் பகுதிகளுக்கான மின் விநியோகம் மற்றும் ரயில் சேவை தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதாக மின்சாரசபை மற்றும் ரயில்வே கட்டுப்பாட்டுத் திணைக்களம் என்பன அறிவித்துள்ளன. இதேவேளை நாட்டின் பல பகுதிகளிலும் போக்குவரத்து நெரிசல் காணப்படுவதாகவும் அறியமுடிகின்றது.
இந்தோனேசியாவில் ஏற்பட்ட நில நடுக்கத்தினை அடுத்து, இந்தியா இலங்கை போன்ற நாடுகளில் இந்நில நடுக்கம் ஏற்பட்டுள்ளது.
இந்தியாவில், சென்னை மாவட்டத்தில் பல இடங்களில் இந்நில நடுக்கத்தினை உணர்ந்ததால் அனைத்து கம்பனிகள், நீதிமன்றங்கள், அலுவலகங்கள் நிறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இலங்கை உட்பட 28 நாடுகளுக்கு இச்சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
2006இல் இந்தோனேசியாவில் சுமத்திரா தீவில் ஏற்பட்ட அதிர்வு போன்றே, அதே இடத்தில் மீண்டும் இன்று 8.7 ரிக்டர் அளவில் அதிர்வு ஏற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இந்தோனேசியா, இந்தியாவில் பல சேதங்கள் ஏற்பட்டதாகவும், இலங்கையில் மாலை 6 மணிக்கு மேல் சுனாமி வரும் எனவும் இலங்கைச் செய்திகள் தெரிவிக்கின்றன.
அத்துடன் இலங்கையில் கரையோரப்பகுதிகளில் மக்களின் பாதுகாப்பு கருதி மின்சார விநியோகம் நிறுத்தப்பட்டுள்ளதாக இலங்கை மின்சார சபை அறிவித்துள்ளது.
குறிப்பாக தெற்கு கிழக்கு வடக்கு பகுதிகளில் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டதனையடுத்து கரையோரப் பகுதிகளுக்கான ரயில் போக்குவரத்தும் நிறுத்தப்பட்டுள்ளதாக ரயில்வேத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
கரையோரப்பகுதிகளில் உள்ள மக்களை பாதுகாப்பான இடங்களுக்குச் செல்லுமாறு அறிவிக்கப்பட்டுள்ள அதேவேளை, மீனவர்கள் தொழிலுக்குச் செல்லவேண்டாமெனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
பசுபிக் சுனாமி எச்சரிக்கை நிலையத்தினால் இது தொடர்பாக விடுக்கப்பட்டுள்ள அறிக்கை பின்வருமாறு:

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக