திங்கள், 21 நவம்பர், 2011

உலகிலேயே அதிக எடையுடன் கூடிய லட்டு: கின்னஸ் சாதனை

ஆந்திர மாநிலத்தில் தயாரிக்கப்பட்ட லட்டு உலகிலேயே மிகப் பெரிய லட்டாக கின்னஸ் உலக சாதனைப் புத்தகத்தில் பதியப்பட்டுள்ளது. இந்த லட்டு 5,570 கிலோ எடையைக் கொண்டுள்ளது.
ஆந்திர மாநிலம் விசாகபட்டினத்தில் கடந்த செப்டம்பரில் 117 அடி உயரம் உள்ள பிரமாண்டமான விநாயகர் சிலை நிறுவப்பட்டது. இந்த ஆண்டில் நிறுவப்பட்ட சிலைகளுள் மிகவும் உயரமானது இந்த சிலை.
இதன் திறப்பு விழாவையொட்டி பிரமாண்டமான லட்டு தயாரிக்கப்பட்டது. இதன் எடை 5,570 கிலோ.
ஒரு வார காலத்துக்கு 50 ஊழியர்கள் இணைந்து இந்த லட்டை தயாரித்தனர். 21 நாட்கள் நடைபெற்ற அந்த கோயில் திருவிழாவை காண வந்த பக்தர்களுக்கு இந்த லட்டு வழங்கப்பட்டது.
தப்பேஸ்வரத்தில் ரியல் எஸ்டேட் வர்த்தகத்தில் ஈடுபட்டுள்ள சுவர்ணபூமி டெவலப்பர்ஸ் நிறுவனம் சார்பில் இந்த லட்டு தயாரிக்கப்பட்டது.
தப்பேஸ்வரத்தில் தயாராகும் இந்த இனிப்பு ஆந்திராவில் மட்டுமல்லாது அமெரிக்காவிலும் புகழ் பெற்று விளங்குகிறது.
பிரிட்டனில் உள்ள இந்து கோயில் ஒன்றில் தயாரிக்கப்பட்ட 551 கிலோ எடை கொண்ட லட்டுதான் இதுவரை உலகின் மிகப் பெரிய லட்டாக இருந்தது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக