புதன், 30 நவம்பர், 2011

தபால் அனுப்புவோருக்கு இலவசமாக பேனா ?

தபால் துறையில் ஸ்பீடு போஸ்ட் ஊக்குவிக்கும் வகையில் தபால் அனுப்புவோருக்கு இலவசமாக பேனா வழங்கப்படுகின்றன. மத்திய அரசின் தபால் துறைக்கு இணையான பல்வேறு கடிதப் போக்குவரத்து சேவைகளை தனியார் நிறுவனங்களான கூரியர் சர்வீஸ்கள் செய்து வருகின்றன.
மாநிலத்தின் ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு அனுப்பப்படும் கூரியர் தபால்கள் 12 மணி நேரம் முதல் 24 மணி நேரத்திற்குள் வினியோகம் செய்யப்படுகின்றன. தபால் துறை மூலம் அனுப்பப்படும் சாதாரண கடிதங்கள் 2 அல்லது 3 நாட்களுக்குப் பிறகு உரியவரிடம் ஒப்படைக்கும் நிலை உள்ளது. கூரியர் நிறுவனங்கள் காலை 9 மணி முதல் இரவு 10 மணி வரை இயங்குவதால் பொதுமக்களிடையே வரவேற்பு உள்ளது. இதனால் தபால் துறையின் மூலம் கடிதப் போக்குவரத்து குறைந்து, வருமான இழப்பு ஏற்பட்டுள்ளது. இதனை தவிர்க்க தபால் துறை "ஸ்பீடு போஸ்ட்' முறையை அமல் படுத்தி மாநிலத்திற்குள் 24 மணி நேரத்திற்குள் கடித போக்குவரத்து திட்டத்தை நடைமுறைப்படுத்துகிறது. மாவட்ட தலைமை அஞ்சலகங்களில் கூடுதல் நேரம் ஒதுக்கீடு செய்து "ஸ்பீடு போஸ்ட் புக்கிங்' செய்கின்றனர். அதேபோல் ஆர்.எம்.எஸ்., மூல மும் தற்போது மாலை 6 மணி முதல் காலை வரை "ஸ்பீடு போஸ்ட் புக்கிங்' நேரத்தை அதிகரித்துள்ளனர். தற்போது விழுப்புரம் ஆர்.எம்.எஸ்., அலுவலகம் மூலம் "ஸ்பீடு போஸ்ட்' அனுப்புவோருக்கு பேனா அன்பளிப்பாக வழங்குவதோடு, கனிவாக பேசூவதும் பொதுமக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இங்கு வழங்கப்படும் பேனாக்களில் பின் கோடு எண்களை பயன்படுத்தி விரைவு தபால் சேவையை பயன்படுத்துங்கள் என்று பிரிண்ட் செய்து வழங்குகின்றனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக