புதன், 31 ஆகஸ்ட், 2011

வீரமங்கை செங்கொடிக்கு ஜோ்மன் ஈழத்தமிழ் மக்களின் வீர வணக்கம்

காஞ்சிபுரம் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு செங்கொடி என்ற வீரத் தங்கை , தூக்கு தண்டனை பெற்று இருக்கும், முருகன், பேரறிவாளன், சாந்தன் ஆகியோரை தூக்கிலிருந்து விடுவிக்க வலியுறுத்தி, தீக்குளித்து தற்கொலை செய்துகொண்டார்.
தனது உயிரை அர்ப்பணித்து மூவரின் தூக்கு தண்டனையை ரத்து செய்ய வலியுறுத்தி, முதல்வர் ஜெயலலிதாவுக்கு கடிதமும் எழுதியுள்ளார். சத்தியத்திற்காக சாகத் துணிந்து விட்டால் ஒரு சாதாரண மனிதப் பிறவியும் சரித்திரத்தைப் படைக்கமுடியும்.
அவ் வகையில் தன், இனத்துக்காக, உயிரை கொடுத்த தமிழ் வீரமங்கை செங்கொடிக்கு யேர்மன் அனைத்து ஈழத்தமிழர்கள் சார்பில் யேர்மன் ஈழத்தமிழர் மக்கள் அவை வீர வணக்கத்தை மிக உணர்வோடு இவ் வேளையில் தெரிவிக்கின்றது.
மரண தண்டனை தீர்க்கப்பட்ட பேரறிவாளன், சாந்தன், முருகன் அவர்களின் வழக்கு செயல்முறையை மனிதாபிதமான முறையில் மீள்பரிசீலனை செய்ய வேண்டும் என்பதையும் அதற்கு அப்பால் அவர்களின் கொடுமையான மரணதண்டனையை கடுமையாக யேர்மன் ஈழத்தமிழர் மக்கள் அவை இவ் வேளையில் கண்டிக்கின்றோம்.
முருகன், பேரறிவாளன், சாந்தன் அவர்களின் விடையங்களில் கடந்த வாரங்களாக முற்கூட்டியே யேர்மனிய மனிதஉரிமை அமைப்புகளிடம் பரப்புரையை மேற் கொண்டிருக்கிறோம்.
அவ் வகையில் சர்வதேச மன்னிப்புச் சபை ஜேர்மன் கிளையின் மரண தண்டனைக்கு எதிரான ஒருங்கிணைப்பு குழு இவ் விடையத்தை தனது கவனத்தில் எடுத்துள்ளதோடு .அத்தோடு யேர்மனிய மக்களை இவர்களின் மரணதண்டைனைக்கு எதிராக இந்திய தூதரகதுக்கு மனு எழுத வேண்டுகோள் விடுத்துள்ளது.
http://www.amnesty.de/urgent-action/ua-246-2011/hinrichtung-droht?destination=node%2F5309
நமது இலக்கை எட்டும் வரை வீரமங்கை செங்கொடி விட்டுச்சென்ற போராட்டத்தைத் தொடர்வோம் என்ற உறுதியோடு தமிழக மக்களின் போராட்டத்துக்கு வலுச் சேர்க்கும் வகையில் யேர்மனியில் தொடர்ந்து நடைபெறும் கவனயீர்ப்பு நிகழ்வுகளின் தகவல்கள் பின்வருமாறு:
Berlin
01 .09 .2011
16 :30 - 18 .30
Indische Botschaft ( இந்திய தூதரகம் )
Tiergartenstraße 17, 10785
Berlin
Frankfurt
01 .09 .2011
10 :00 - 13 : 00
Indisches Generalkonsulat
Essen
01 .09 .2011
17 :00 மணி
Auf dem Willy -Brandt platz 1
Essen
Bonn
01 .09 .2011
10 :00 மணி
Heer str 178 ,
53108 Bonn
Aachen
01 .09 .2011
11 :00 மணி
Menschenrechtsverein für Migranten e.V.
Krantzstr. 8
52070 Aachen (மனு கையளிப்பு மட்டும்)
ஏனைய நகரங்களின் தகவல்கள் மிக விரைவில் அறிவிக்கப்படும்.
நன்றி
யேர்மன் ஈழத்தமிழர் மக்கள் அவை
www.vetd.info | info@vetd.info

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக