செவ்வாய், 24 ஜூலை, 2012

நல்லூர் கந்தன் உற்சவம் இன்று கொடி ஏற்றத்துடன் ஆரம்பமானது

July 24, 2012
நல்லூர் கந்தன் உற்சவம் இன்று கொடி ஏற்றத்துடன் ஆரம்பமானது
வரலாற்றுப் புகழ்மிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்த பெருந் திருவிழா இன்று முற்பகல் 10 மணிக்குக் கொடியேற்றத்துடன் ஆரம்பமாகியது. தொடர்ந்து 25 நாள்கள் திருவிழா இடம்பெறவுள்ளது.
ஓகஸ்ட் 2 ஆம் திகதி வியாழக்கிழமை மஞ்சம் மாலை 5 மணிக்கு மஞ்சத் திருவிழாவும் 10 ஆம் திகதி வெள்ளிக்கிழமை கார்த்திகை திருவிழாவும் 12 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை சந்தான கோபாலர் திருவிழாவும் அன்று மாலை கைலாச வாகனத் திருவிழாவும் இடம்பெறும்.
ஓகஸ்ட் 13 ஆம் திகதி காலை கஜவல்லி, மகாவல்லி திருவிழாவும் மாலை வேல் விமானமும் இடம்பெறும். 14 ஆம் திகதி தண்டாயுதபாணி திருவிழாவும் மாலை ஒருமுகத் திருவிழாவும் 15 ஆம் திகதி சப்பரத் திருவிழாவும் இடம் பெறும். ஓகஸ்ட் 16 ஆம் திகதி வியாழக்கிழமை தேர்த்திருவிழா இடம்பெறும். மறுநாள் 17 ஆம் திகதி தீர்த்தத் திருவிழா இடம்பெறும். 18 ஆம் திகதி பூங்காவனமும் 19 ஆம் திகதி வைரவர் திருவிழாவும் இடம்பெற்றுத் திருவிழா நிறைவடையும்.
கடந்த ஆண்டுகளை விட இந்த முறை அதிக எண்ணிக்கையான அடியவர்கள் திருவிழாவில் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக