புதன், 1 ஆகஸ்ட், 2012

லண்டன் ஒலிம்பிக் தீபம் அணைக்கப்பட்டு இடமாற்றம்

Published:Tuesday, 31 July 2012
லண்டன் ஒலிம்பிக் போட்டிக்கான தொடக்க விழா கடந்த 27ம் திகதி கோலாகலமாக நடந்தது. வண்ணமயமான கலைநிகழ்ச்சிகள், வாணவேடிக்கைகள் என ஒலிம்பிக் மைதானம் களைகட்டியது.
தொடக்கவிழா நிகழ்ச்சிகளை பிரபல ஹாலிவுட் இயக்குனர் டேனி பாய்ல் வடிவமைத்திருந்தார். உலக அளவில் ரசிகர்களை பிரமிக்க வைத்த தொடக்க விழாவுக்குப் பின்பு, தடகள போட்டிகளுக்காக மைதானத்தை தயார் செய்யும் பணிகள் நடந்து வருகின்றன.
இதன் ஒரு பகுதியாக ஒலிம்பிக் சுடர் விளக்கு மைதானத்தின் வேறு பகுதிக்கு மாற்றப்பட்டது. இதையொட்டி, சுடர் தற்காலிகமாக அணைக்கப்பட்டு கிரேன்களின் உதவியுடன் தெற்கு முனைக்கு நகர்த்தப்பட்டது.
சுடர்விளக்கின் கொப்பரை, 8.5 மீட்டர் உயரம் கொண்ட ஸ்டீல் குழாய்களைக் கொண்டு அமைக்கப்பட்டுள்ளது.
மேலும், போட்டியில் பங்கேற்கும் நாடுகளை குறிக்கும் வகையில் இதில் 204 குழாய்களும் அவை ஒவ்வொன்றிலும் ஒரு நாட்டின் பெயரும் பொறிக்கப்பட்டுள்ளது. இந்த குழாய்களின் முனையில் தாமிரத்தாலான இதழ்களும் இடம் பெற்றுள்ளன.







கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக