திங்கள், 3 அக்டோபர், 2011

இலங்கையில் நவம்பர் மாதத்தில் சூறாவளி ஏற்படும்? வளிமண்டலவியல் திணைக்களம்


இலங்கையில் நவம்பர் மாதத்தில் சூறாவளி ஏற்படக்கூடிய சாத்தியக்கூறுகள் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
தற்போது நிலவுகின்ற அதிவெப்பமான காலநிலையே வங்காள விரிகுடாவில் சூறாவளி உருவாகக் காரணமாக உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எதிர்வரும் தினங்களில் மேல், தென், மத்திய, வட மத்திய, ஊவா மற்றும் கிழக்கு மாகாணப் பகுதிகளில் மாலை வேளைகளில் மழைபெய்யக்கூடிய சாத்தியக்கூறுகள் காணப்படுவதாகவும் வளிமண்டலவியல் திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது.
காலி, மாத்தறை மாவட்டப்பகுதிகள் மற்றும் மேல்மாகாணத்தில் காலை வேளை மழையும் பலத்த காற்றும் வீசக்கூடிய சாத்தியக்கூறுகள் இருப்பதாகவும் அது மேலும் தெரிவித்துள்ளது.
மின்னல் தாக்கங்கள் ஏற்படக்கூடிய சாத்தியக்கூறுகள் காணப்படுவதால் மக்களை பாதுகாப்பாக இருந்து தாக்கங்களால் ஏற்படக்கூடிய பாதிப்பினை குறைக்குமாறும் வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதேவேளை மின்னல் தாக்கியதில் இவ்வருடத்தில் நாட்டில் பல்வேறு பகுதிகளிலும் 30 பேர் உயிரிழந்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக