புதன், 12 அக்டோபர், 2011

கதிர் வீச்சு அளவினைக் கண்டறியும் கையடக்கத் தொலைபேசி: அடுத்தமாதம் ஜப்பானில் அறிமுகம்

ஜப்பானிய கையடக்கத்தொலைபேசி ஜாம்பவானான என்.டி.டி. டொகோமோ கதிர்வீச்சு அளவினைக் கண்டறியக்கூடிய கையடக்கத் தொலைபேசியினை அறிமுகம் செய்யவுள்ளது.  அண்மையில் அந்நாட்டின் புகுஷிமா அணு உலையிலிருந்து அணுக்கசிவு ஏற்பட்டதனைத் தொடர்ந்து அங்குள்ள மக்களிடையே தமது ஆரோக்கியம் தொடர்பில் நிலவும் அக்கறையை கருத்தில் கொண்டே இக் கையடக்கத்தொலைபேசியினை அந்நிறுவனம் உருவாக்கியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

அடுத்தமாதம் ஜப்பானில் நடைபெறவுள்ள தொழில்நுட்பக் கண்காட்சியில் இதனை அந்நிறுவனம் அறிமுகப்படுத்தவுள்ளது.  இக்கையடக்கத்தொலைபேசியின் வெளிப்பகுதிக் கவசத்தில் சமிக்ஞைகள் பொருத்தப்பட்டிருக்கும். இதுவே கதிர்வீச்சின் அளவினைக் கண்டறியுமென இதனை உருவாக்கியுள்ள நிறுவனம் தெரிவித்துள்ளது.  ஜப்பானில் அணுக்கசிவு ஏற்பட ஆரம்பித்த நாட்களில் இருந்து கதிர்வீச்சை அளவிடும் உபகரணங்களுக்கான கேள்வி அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக